குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானவர் தான் அஸ்வின். தற்போது இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

அண்மையில் இவர் நடித்த ஆல்பம் பாடலான குட்டி பட்டாஸ் யூடியூப்பில் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

இதனையடுத்து, அஸ்வின் படத்தில் கமிட் ஆகி, மொத்தமாக 3 படத்துக்கு 30 லட்சம் சம்பளம் கொடுத்து கமிட் செய்திருந்தார் தயாரிப்பாளர் டிரைடண்ட் ரவீந்தரன்.

இதற்கிடையில், கிருத்திகா உதயநிதி இயக்கும் புதிய படத்தில் அவர் கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியது.

அதன் பின்னர் அந்த படத்தில் இருந்து அஷ்வின் விலகியதாகவும் அவருக்கு பதில் பிரபல மலையாள நடிகர் ஜெய்ராமின் மகன் காளிதாஸ் ஹீரோவாக கமிட்டாகிவிட்டதாகவும் கோலிவுட்டில் செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில், இதுகுறித்து அஷ்வின் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில், எனக்கு இந்த கதை கேட்டதும் மிகவும் பிடித்து இருந்தது. ஆனால், படக்குழு இதனை ஒரு வெப் சீரிஸ்ஸாக எடுக்க திட்டமிட்டிருப்பதாக கூறினர்.

தனக்கு வெள்ளித்திரையில் நடிகராக வரவேண்டும் என்பது தான் ஆசை எனவே இந்த படத்தில் இருந்து நான் விலகிக்கொள்கிறேன் என கூறிவிட்டேன் என தெரிவித்துள்ளார்.