தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் கோப்ரா என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
மேலும் சியான் விக்ரமுக்கு துருவ் விக்ரம் மற்றும் அக்ஷிதா என ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருப்பது அனைவரும் அறிந்ததே.
தன்னுடைய மகளை மனோ ரஞ்சித் என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்தார். தற்போது அக்ஷிதா கர்ப்பமாக இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் விக்ரம் தாத்தாவாக பிரமோஷன் பெற இருப்பதால் குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்து போயுள்ளது. துருவ் மாமாவாக பதவி உயர்வு பெறப் போகிறார்.
விஷயம் அறிந்த விக்ரம் ரசிகர்கள் துருவ் மற்றும் விக்ரமுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.