சர்ச்சைக்குரிய பிரபலமாக வலம் வருபவர் மீரா மிதுன். தன்னை பிரபல படுத்திக்கள்ள திரிஷா, நயன்தாரா என தமிழ் சினிமாவின் உச்ச நடிகைகளை சீண்டி வந்த இவர் எதிர்பார்த்த அளவு பலன் கிடைக்காததால் தற்போது நடிகர்களான விஜய், சூர்யா, ரஜினிகாந்த் போன்றவர்களை சீண்டி வருகிறார்

மீரா மிதுனின் பேச்சை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் நடிகர்கள் அமைதியாக இருந்து வந்தாலும் அவரது ரசிகர்கள் மீராவின் பேச்சை பொறுத்துக்கொள்ள முடியாமல் கொந்தளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சர்ச்சைக்கு பெயர் போன இன்னொரு நடிகையான வனிதா விஜயகுமாரிடம் இது குறித்து பேட்டி ஒன்றில் கேட்க அவர் கிடைத்த கேப்பில் கடா வெட்டி உள்ளார்.

அதாவது யார் யாரைப் பற்றியும் தவறாக பேசக்கூடாது. அன்று என்னை பற்றி பலர் தவறாக கூறியபோது யாரும் ஆதரவாக வரவில்லை. ஆனால் இன்று உச்ச நடிகர்களான விஜய் சூர்யா என்றால் அனைவரும் கொந்தளிக்கிறார்கள்.

இது ரொம்ப தப்பு என கூறி ஆதங்கப்பட்டு உள்ளார்.