பொதுவாகவே ஒருவர் பிறந்த ராசி மற்றும் நட்சத்திரம் ஆகியன அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடப்பிடுகின்றது.

அது போல் எண்கணித சாஸ்திரத்தின் அடிப்படையில் வகையில் ஒருவர் பிறக்கும் திகதிக்கும் அவர்களின் ஆளுமை மற்றும் குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்ப்பு காணப்படுகின்றது.

Numerology: இந்த திகதியில் பிறந்தவரா நீங்க? அப்போ நிச்சயம் திறமைசாலியா இருப்பீர்கள் | Which Born Dates Are Gifted And Hardworking Braveஅந்தவகையில் குறிப்பிட்ட சில திகதிகளில் பிறந்தவர்கள் மிகவும் திறமைசாலிகளாக இருப்பார்கள். எந்தெந்த திகதிகள் என இந்த பதிவில் பார்க்கலாம்.

(எண் 4 )4,13,22,31

Numerology: இந்த திகதியில் பிறந்தவரா நீங்க? அப்போ நிச்சயம் திறமைசாலியா இருப்பீர்கள் | Which Born Dates Are Gifted And Hardworking Brave

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் இயற்கையாகவே  மிகவும் திறமைசாலிகளாக இருப்பார்கள். இவர்களிடம் பொது அறிவு அதிகமாக இருக்கும்.இவர்கள் இலக்கை அடைய வேண்டும் என்பதில் மிகவும் உறுதியுடன் இருப்பார்கள். மற்றவர்களை எதிர்ப்பார்த்து இருக்கும் நிலை இவர்களுக்கு ஒருபோதும் ஏற்படாது. இவர்களை வேலைக்கு வைத்திருப்பதால் நிறுவனம் மிகுந்த லாபத்தை பெரும். இவர்கள் கடின உழைப்பாளிகளாகவும் இருப்பார்கள். 

(எண் 5) 5,14,23

Numerology: இந்த திகதியில் பிறந்தவரா நீங்க? அப்போ நிச்சயம் திறமைசாலியா இருப்பீர்கள் | Which Born Dates Are Gifted And Hardworking Brave

இந்த திகதிகளில்  பிறந்தவர்கள் கடினமாக உழைத்து இலக்கை அடையும் தன்மையை கொண்டிருப்பார்கள். இவர்களால் ஒரே நேரத்தில் பல வேலைகளில் கவனம் செலுத்த முடியும். இவர்கள் எந்நேரமும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். இவர்கள் ஒரு வேலையை ஆரம்பித்துவிட்டால் அதனை வெற்றிகரமாக முடிக்கும் வரையில் ஓயவே மாட்டார்கள். 

(எண் 6) 6,15,24

Numerology: இந்த திகதியில் பிறந்தவரா நீங்க? அப்போ நிச்சயம் திறமைசாலியா இருப்பீர்கள் | Which Born Dates Are Gifted And Hardworking Brave

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் பொறுப்பு மற்றும் விடாமுயற்சிக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். அவர்கள் இயல்பாகவே பொறுப்புகளை சுமப்பதற்கு கவலைப்பட மாட்டார்கள். இவர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் மனதளவில் பெரிதும் மகிழ்ச்சியடைவார்கள். இவர்கள் திறமையால் வாழ்வில் உச்சத்துக்கு செல்வார்கள். 

(எண் 8) 8,17,26

Numerology: இந்த திகதியில் பிறந்தவரா நீங்க? அப்போ நிச்சயம் திறமைசாலியா இருப்பீர்கள் | Which Born Dates Are Gifted And Hardworking Brave

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் எதிர்காலம் குறித்து அதிகமாக சிந்திக்கக்கூடியவர்களாக இருப்பார்கள். இலக்குகளை அடைய வேண்டும் என்ற உறுதியான எண்ணம் இவர்களிடம் காணப்படும்.தலைமைத்துவ பண்புகள் இவர்களிடம் இயல்பாகவே அமைந்திருக்கும். இதனால் பல சவாலான சூழ்நிலைகளை எளிதில் கையாள்வார்கள். இவர்கள் தனித்துவமான விடயங்களில் திறமை கொண்டவர்களாக இருப்பார்கள்.