பொதுவாகவே ஒருவர் பிறந்த ராசி மற்றும் நட்சத்திரம் ஆகியன அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடப்பிடுகின்றது.

அது போல் எண்கணித சாஸ்திரம் எனப்படுவது தொன்று தொட்டு புலக்கத்தில் இருக்கும் ஒரு நம்பிக்கையாகும். அதன் அடிப்படையில்  ஒருவர் பிறக்கும் திகதிக்கும் அவர்களின் ஆளுமை மற்றும் குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்ப்பு காணப்படுகின்றது.

இந்த திகதியில் பிறந்தவரா நீங்க? அப்போ உங்களை பிடிக்காதவர்களே இருக்க மாட்டார்கள் | Born On These Dates Everybody Likes Them

அந்தவகையில் குறிப்பிட்ட சில திகதிகளில் பிறந்தவர்கள் அனைவராலும் ஈர்க்கப்படும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எப்போதும் தோற்றத்தின் அடிப்படையிலும் ஆளுமையின் அடிப்படையிலும் மற்றவர்களை காந்தம் போல் கவரக்கூடியவர்களாக இருக்கின்றனர். எந்த திகதிகள் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

எண் 9 

இந்த திகதியில் பிறந்தவரா நீங்க? அப்போ உங்களை பிடிக்காதவர்களே இருக்க மாட்டார்கள் | Born On These Dates Everybody Likes Them

9,18,27 ஆகிய எண்களில் பிறந்தவர்கள் மிகவும் எப்போதும் மற்றவர்களிடம் அன்பாக நடந்துக்கொள்வார்கள். இவர்களின் வேடிக்கையான பேச்சால் மற்றவர்களையும் சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பார்கள். எந்த பிரச்சனைக்கும் நகைச்சுவைதான் தீர்வு என்ற உணர்வு இவர்களிடம் அதிகமான காணப்படும். அதனால் இவர்களை அனைவருமே விரும்புவார்கள். 

எண் 5

இந்த திகதியில் பிறந்தவரா நீங்க? அப்போ உங்களை பிடிக்காதவர்களே இருக்க மாட்டார்கள் | Born On These Dates Everybody Likes Them

5,14,23 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே மிகவும் குறும்புத்தனம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எப்போதும் புது புது  விடயங்களை முயற்சிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் ஆளுமை மற்றவர்களை எளிதில் கவரக்கூடியதாக இருக்கும். 

எண் 1

இந்த திகதியில் பிறந்தவரா நீங்க? அப்போ உங்களை பிடிக்காதவர்களே இருக்க மாட்டார்கள் | Born On These Dates Everybody Likes Them

1,10,19,28 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள் மிகவும் அர்ப்பணிப்பு குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்களுடன் இயல்பாகவே நட்புடன் பழகும் தன்மை இவர்களுக்கு அமைந்திருக்கும். இவர்களின் தோற்றமும் மற்றவர்களை எளிதில் ஈர்க்கும் வண்ணம் அமைந்திருக்கும். அதனால் இவர்களை பிடிக்காதவர் யாரும் இருக்க மாட்டார்கள். 

எண் 7

இந்த திகதியில் பிறந்தவரா நீங்க? அப்போ உங்களை பிடிக்காதவர்களே இருக்க மாட்டார்கள் | Born On These Dates Everybody Likes Them

7,16,25 ஆகிய திகதிகளில் எந்த விடயத்தையும் சவாலாக எடுத்துக்கொண்டு விடாமுயற்சியுடன் போராடி வெற்றியடைய கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களின் இந்த குணம் அனைவரையும் வசீகரிக்கும் அதனால் இவர்களை அனைவரும் விரும்புவார்கள். 

எண் 3

இந்த திகதியில் பிறந்தவரா நீங்க? அப்போ உங்களை பிடிக்காதவர்களே இருக்க மாட்டார்கள் | Born On These Dates Everybody Likes Them

3,12,21,30 ஆகிய எண்களில் பிறந்தவர்கள் சிறந்த படைப்பாற்றல் மற்றும் தலைமைத்துவ பண்புகளையும் கொண்டிருப்பார்கள். மற்றவர்களுடன் விளையாட்டுத்தனமாக பழகும் இவர்களை அனைவருக்கும் எளிதில் பிடித்துவிடும்.