கிரகங்கள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்னர் தங்கள் இடத்தை மாற்றி கொள்கின்றன. இதன் தாக்கம் எல்லா ராசிகளுக்கும் இருக்கும்.

தற்போது மீன ராசியில் சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு 6 கிரகங்கள் இணையப் போகின்றன. ஆறு கிரகங்கள் ஒரு ராசியில் சந்திப்பதால் ஒரு சுப யோகம் உருவாகிறது.

இது சில ராசிகளுக்கு சுப யோகத்தை கொடுக்கும். மார்ச் 29, 2025 அன்று, சனிபகவான் மீன ராசிக்குள் நுழைகிறார். பிப்ரவரி 27, 2025 அன்று, சுக்கிரன் மீன ராசிக்குள் நுழைகிறது.

மேலும் மார்ச் 14 அன்று சூரியனும் மீன ராசியில் நுழைகிறார். மேலும், மார்ச் 28, 2025 அன்று சந்திரனும் மீன ராசியில் நுழைகிறார். இந்த கிரகப்பெயர்ச்சியால் எந்த ராசிகள் ராஜவாழ்க்கை வாழப்போகின்றது என்பதை பார்க்கலாம்.

100 ஆண்டுகளுக்கு பின் உருவாகிய மீன ராசி 6 கிரக சேர்க்கை: ஜாக்பட் எந்த ராசிகளுக்கு? | 6 Planetary Conjunction Zodiac Signs Success

 

மிதுனம்
  • மீன ராசியில் 6 கிரகங்களின் இணைப்பு மிதுன ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக் கதவுகள் திறக்கப் போகிறது.
  • உங்களுக்கு வணிகம் தொடர்பான எல்லாம் வெற்றியில் முடியும்.
  • நீங்கள் செய்யும் வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை பெறுவீர்கள்.
  • உங்கள் கடின உழைப்புக்கான அங்கீகாரம் தேடிவரும்.
  • இப்போது செய்யும் வேலையில் பதவி உயர்வு கிடைக்கும்.
  • பல நல்ல தொழில் ஒப்பந்தங்கள் தேடி வரும்.
கடகம்
  • கடக ராசிக்காரர்களுக்கு இந்த அரிய கிரக சேர்க்கை சிறப்பான பலன்களைக் கொடுக்கும்.
  • கடக ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட வீட்டில் இந்த சுப யோகம் உருவாகிறது.
  • நீங்கள் எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் வெற்றியில் முடிய அதிஷ்டம் துணை இருக்கும்.
  • மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்
  • போட்டி போட்டு எந்த வேலையையும் முடிக்கலாம்.
  • கஷ்டங்களுக்கு முடிவு கட்ட போகிறீர்கள்.
தனுசு
  • ஆறு கிரகங்களின் சேர்க்கை தனுசு ராசிக்காரர்களுக்கு சிறந்த பலன்களை வழங்கும்.
  • இவர்களுக்கு செய்யும் தொழிலில் முன்னேற்றம் அதிகரிக்கும்.
  • இதுவரை இல்லாத வாழ்க்கையில் அனைத்து வகையான பொருள் இன்பங்களையும் எதிர்பார்க்கலாம்.
  • இந்த காலகட்டத்தில் ஒரு புதிய சொத்து வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
  • உங்களின் முடிக்கப்படாத அனைத்து பணிகளும் இப்போது நிறைவடையும்.
  • நீங்கள் செய்ய நினைத்துக்கொண்டிருக்கும் வேலைகள் ஆசைகள் எல்லாம் நிறைவேறும்.