ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களும் ஏதோ ஒரு வகையில் தனித்துவமானவர்களாக இருப்பார்கள்.
ஒருவரின் ராசியை வைத்து அவர்களின் குணங்கள் மற்றும் அவர்களிடம் இருக்கும் திறமைகளை கணிக்கலாம்.
அந்த வகையில், ஜோதிடத்தில் கூறியது போன்று குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் அலுவலக வேலையில் மிகவும் புத்திசாலிகளாகவும், IQ அளவும் மிகவும் சிறப்பானவர்களாகவும் இருப்பார்களாம்.
அப்படியானவர்கள் என்னென்ன ராசியில் பிறந்திருப்பார்கள் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
மிதுனம் |
மிதுன ராசியில் பிறந்தவர்கள் புத்திசாலிகளாக இருப்பார்கள். ஒவ்வொரு வேலையையும் பார்த்து பார்த்து செய்யும் குணம் இவர்களிடம் இருக்கும். புதிய விடயங்களை தேடி தேடி கற்றுக் கொள்வார்கள். கலை மீது அதிகமான ஆர்வம் இருக்கும். புத்திசாலிகளாக இருப்பதால் திருமண வாழ்க்கையிலும் சிறந்து விளங்குவார்கள். தொழில் வாழ்க்கையில் வெற்றிப் பெறுவதை அவர்கள் இலக்காக கொண்டிருப்பார்கள். |
கன்னி |
கன்னி ராசிக்காரர்கள் எல்லாவற்றிலும் கவனம் செலுத்துவார்கள். அவர்களிடம் இயற்கையாகவே IQ அளவு அதிகமாக இருக்கும். எல்லாவற்றையும் ஆழமாகப் பார்க்கும் குணம் புதிய புதிர்களைத் தீர்க்க உதவியாக இருக்கும். துல்லியம் தேவைப்படும் வேலைகளுக்கு ஏற்றவர்களாக பார்க்கப்படுகிறார்கள். கணிதம், அறிவியல் மற்றும் ஆராய்ச்சி போன்ற துறைகளில் சிறந்து விளங்குவார்கள். தனது வேலையில் கவனமாக இருப்பார்கள். கூர்மையான மனம் கொண்டவர்களாகவும், ஒவ்வொரு வேலையையும் சரியாகச் செய்பவர்களாக இருப்பார்கள். |
விருச்சிகம் |
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் வலுவான விருப்பம் மற்றும் விஷயங்களை மதிக்கும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். இயல்பாகவே ஒரு விடயத்தை செய்வதில் பலத்த ஆர்வம் காட்டுவார்கள். சிறந்த ஆராய்ச்சியாளர்கள், துப்பறியும் நிபுணர்கள் மற்றும் உளவியலாளர்கள். விஷயங்களை ஆழமாகப் பார்த்து, வித்தியாசமான கண்ணோட்டத்தை செலுத்துவார்கள். தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகளில் இருந்து விடுபட IQ அளவைப் பயன்படுத்துவார்கள். அலுவலகத்தில் தனித்து விளங்குவார்கள். |