2025 ஆம் ஆண்டு பிறந்து நாம் தற்பொழுது ஜூன் மாதத்தில் இருக்கின்றோம். இந்த மாதம் மிகவும் செழிப்பான மாதமாக கருதப்படுவதால், இந்த மாதத்தில் அதிக அளவிலான திருமணங்கள் நடக்கிறது.

மேலும், ஆன்மீக வழிபாட்டிற்கும் மிக முக்கியமான மாதமாகும். அப்படியாக, இந்த ஜூன் மாதத்தில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விரதங்களும் விசேஷங்கள் பற்றியும் பார்ப்போம்.

ஜூன் மாதத்தில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விரதங்களும் விசேஷங்களும் | Important Fasts And Festivals To Observe In June

 ஜூன் 2025 விசேஷ நாட்கள் : ஜூன் 09, வைகாசி 26, திங்கள், வைகாசி விசாகம்

ஜூன் 2025 விரத நாட்கள் : அமாவாசை ஜூன் 25 ஆனி 11 புதன், பெளர்ணமி ஜூன் 10 வைகாசி 27 செவ்வாய், கிருத்திகை ஜூன் 22 ஆனி 08 ஞாயிறு, திருவோணம் ஜூன் 15 ஆனி 01 ஞாயிறு

ஏகாதசி ஜூன் 06 வைகாசி 23 வெள்ளி,  ஜூன் 21 ஆனி 07 சனி

சஷ்டி ஜூன் 01 வைகாசி 18 ஞாயிறு,  ஜூன் 17 ஆனி 03 செவ்வாய்

ஜூன் மாதத்தில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விரதங்களும் விசேஷங்களும் | Important Fasts And Festivals To Observe In June

 

சங்கடஹர சதுர்த்தி ஜூன் 14 வைகாசி 31 சனி, 

சிவராத்திரி ஜூன் 23 ஆனி 09 திங்கள்

பிரதோஷம் ஜூன் 08 வைகாசி 25 ஞாயிறு,  ஜூன் 23 ஆனி 09 திங்கள்

சதுர்த்தி ஜூன் 29 ஆனி 15 ஞாயிறு

ஜூன் 2025 சுப முகூர்த்த நாட்கள் : ஜூன் 05 வைகாசி 22 வியாழன் வளர்பிறை முகூர்த்தம், ஜூன் 06 வைகாசி 23 வெள்ளி வளர்பிறை முகூர்த்தம்,  ஜூன் 08 வைகாசி 25 ஞாயிறு வளர்பிறை முகூர்த்தம்,  ஜூன் 16 ஆனி 02 திங்கள் தேய்பிறை முகூர்த்தம்,  ஜூன் 27 ஆனி 13 வெள்ளி வளர்பிறை முகூர்த்தம்

ஜூன் 2025 வாஸ்து நாள் மற்றும் நல்ல நேரம் : ஜூன் 04 வைகாசி 21 புதன் காலை 09.58 முதல் 10.34 வரை