நம்மில் பலரும் பழங்களில் மாதுளைப்பழத்தை அதிகமாக விரும்பி சாப்படுவார்கள். இன்னும் சிலர் அடிக்கடி வாங்கி வைத்து  மாதுளை ஜூஸ் போட்டு குடிப்பார்கள்.

குழந்தைகளின் ஸ்நாக்ஸ் பாக்ஸில் மாதுளையை அடிக்கடி பார்க்கலாம். ஏனெனின் இதிலுள்ள அதிகப்படியான ஊட்டசத்துக்கள் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

மாதுளைகளை அதிக அளவில் சந்தையில் இருந்து வாங்கி, வீட்டிற்கு கொண்டு வந்தது சேமித்து வைப்பது வழக்கம். அடிக்கடி மாதுளையை பெற வேண்டும் என்றால் நிச்சயம் குளிர்சாதன பெட்டியில் தான் சேமிக்க வேண்டும்.

மாறாக, குளிர்சாதன பெட்டியில் சேமிக்கப்படாத பல பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளன. அதில் ஒன்றாக மாதுளை பழம் பார்க்கப்படுகிறது. மாதுளையை குளிர்சாதன பெட்டியில் வைத்திருப்பது அதன் தரம் மற்றும் சுவையை பாதிக்கும்.

மாதுளை வாங்கி ஃபிரிட்ஜில் வைப்பவரா நீங்க? இனியும் இந்த தவறை செய்யாதீங்க | Effects Of Keeping Pomegranate In The Refrigerator

அந்த வகையில், மாதுளையை ஏன் குளிர்சாதன பெட்டியில் சேமிக்கக்கூடாது என்பதற்கான காரணத்தை பதிவில் பார்க்கலாம்.   

  1. மாதுளை பழம் வாங்கி குளிர்சாதன பெட்டியில் வைத்திருப்பது அதன் சாறு மற்றும் விதை அமைப்பில் தாக்கம் செலுத்தும். குளிர்ந்த வெப்பநிலை விதைகளை மென்மையாகவோ அல்லது ஈரமாகவோ ஆக்கி, மாதுளையின் இயற்கையான சுவையை குறைத்து விடும்.

2. மாதுளையை நீண்ட நேரம் குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்திருந்தால் அதிலுள்ள ஊட்டசத்துக்கள் குறையும். அதே போன்று ஆக்ஸிஜனேற்றிகளும் குறைக்கும். புதிய மாதுளைகள் அறை வெப்பநிலையில் வைத்திருந்தால் அதிக ஊட்டச்சத்துக்களை பாதுகாக்கும்.

மாதுளை வாங்கி ஃபிரிட்ஜில் வைப்பவரா நீங்க? இனியும் இந்த தவறை செய்யாதீங்க | Effects Of Keeping Pomegranate In The Refrigerator

3. குளிர்சாதன பெட்டியில் வழக்கமாக இருக்கும் ஈரப்பதம் மாதுளையின் தோலை ஈரமாக்கி, மாதுளை பூஞ்சை காளான் அல்லது விரைவில் அழுகி விட வழி வகுக்கும். மாதுளைத் தோல் ஈரப்பதத்தை உறிஞ்சி விடும் என்பதால் பழம் இலகுவில் பழுதாகி விடும்.

4. மாதுளை, குளிர்சாதன பெட்டியில் வைக்கப்படும் மற்ற உணவுகளின் வாசனையை உறிஞ்சிக் கொள்ளும். இதனால் சுவையில் மாற்றம் ஏற்படுவதுடன் மாதுளைத் தோல் நுண்துளைகள் கொண்டது என்பதால் வாசணையும் வெளியேறி விடும்.

மாதுளை வாங்கி ஃபிரிட்ஜில் வைப்பவரா நீங்க? இனியும் இந்த தவறை செய்யாதீங்க | Effects Of Keeping Pomegranate In The Refrigerator

5. குளிர்சாதன பெட்டியில் மாதுளை பழத்தை சில நாட்கள் வைத்திருந்தால், அதன் தோல் உலர்ந்து கடினமாகி விடும். எளிதில் உரிக்க முடியாமல் இருக்கும்.