எந்தவொரு உறவும் நீண்ட காலம் நிலைத்திருக்க நம்பிக்கை அவசியம் என பலரும் கூறி கேட்டிருப்போம். உறவில் நேர்மையும், வெளிப்படைத்தன்மையும் இருக்க வேண்டும்.
தற்போது பல உறவுகள் விரைவில் முடிவடைவதற்கு முக்கிய காரணமாக நம்பிக்கையின்மை பார்க்கப்படுகிறது. அனைவரிடமும் அவசியம் இருக்க வேண்டிய இந்த குணம் இப்போது வெகுசிலரிடம் மட்டுமே இருக்கிறது.
ஒரு பெண் தன் கணவரிடம் இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கும் குணங்களில் விசுவாசம், நம்பகத்தன்மை மற்றும் உண்மையான அன்பு ஆகியன அவசியம்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, குறிப்பிட்ட சில மாதங்களில் பிறந்த ஆண்களிடம் நம்பிக்கை இயற்கையாகவே அதிகமாக இருக்கும். அப்படியானவர்கள் என்னென்ன மாதங்களில் பிறந்திருப்பார்கள் என்பதை பதிவில் பார்க்கலாம்.
ஜூன் | மற்ற மாதங்களை விட ஜூன் மாதம் பிறந்த ஆண்கள் பெரிய மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். மனைவியை அன்பாக பார்த்து கொள்ளும் குணம் அவர்களுக்கு இருக்கும். தன்னுடைய மனைவிக்கு கனவிலும் துரோகம் செய்யாதவர்களாக இருப்பார்கள். ஜூன் மாதத்தில் பிறந்த ஆண்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படுவார்கள். தன்னுடைய நேர்மையான குணம் அவர்களை மனைவியுடன் நெருக்கமாகவே வைத்திருக்கும். தங்களுடைய உணர்வுகளை வலுப்படுத்த அதிகமாக முயற்சி செய்வார்கள். நேர்மையான கணவராக மட்டுமில்லாமல் மனைவியை பாதுகாக்கும் கணவர்களாகவும் இருப்பார்கள். தன்னுடைய துணையின் சந்தோஷத்திற்காக எல்லாவற்றையும் செய்வார்கள்.
ஆண் ஆடைகள் |
அக்டோபர் | அக்டோபர் மாதம் பிறந்த ஆண்கள் விசுவாசமானவர்களாக இருப்பார்கள். இந்த மாதத்தில் பிறந்த ஆண்களிடம் இருக்கும் மிக முக்கியமான பண்புகளில் இதுவும் ஒன்று. ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் நடந்து கொள்வார்கள். திருமண வாழ்க்கையில் நேர்மையான உறவை வைத்திருப்பார்கள். இவர்களும் அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருப்பார்கள். அவர்கள் தங்கள் மனைவியுடன் உணர்வுரீதியாக இணைந்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் உறவுக்கு வெளியே மகிழ்ச்சியைத் தேடுவதை பற்றி ஒருபோதும் சிந்திக்க மாட்டார்கள். |
மே | மே மாதம் பிறந்தவர்கள் மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அன்புக்குரியவர்களின் உணர்ச்சிகளையும் நல்வாழ்வையும் கவனித்துக் கொள்பவர்களாக இருப்பார்கள். இவர்களுடைய உறவில் உண்மை இருக்கும். இது போன்று நேர்மையானவர்களை நீங்கள் காண்பது அரிது. தங்கள் மனைவியுடன் பகிர்ந்து கொள்ளும் தொடர்பின் ஆழத்தையும், உணர்ச்சிப் பிணைப்பையும் மதிக்கிறார்கள். |