சாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி, ஒருவருடைய உடல் அமைப்பை வைத்து அவர்களின் ஆளுமைகளை தெரிந்த கொள்ளலாம்.
அதில் ஒன்று தான் கால் விரல் வடிவமைப்பை வைத்து நீங்கள் எப்படியான குணங்கள் கொண்டவர் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஒருவரின் மேல் பாதம் ஒவ்வொரு வடிவத்தில் இருப்பதை நாம் அவதானித்திருப்போம். இது அவர்களின் பரம்பரை வழியாக வந்தாலும், அதற்கான தனிச்சிறப்புக்கள் உள்ளன.
அந்த வகையில், Foot Shape-ஐ வைத்து எப்படி ஆளுமையை தெரிந்து கொள்ளலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.
ரோமன் ஃபுட் ஷேப் வடிவம் என்பது காலின் கட்டை விரல் அதற்கடுத்து இருக்கும் இரண்டாவது மற்றும் மூன்றாவது விரல் உள்ளிட்டவை ஒரே நீளத்தில் இருந்து, நான்காவது மற்றும் ஐந்தாவது விரல்கள் நீலம் குறைவாக இருந்தால் நீங்கள் மற்றவர்களுடன் நட்பாக பழகும் குணம் கொண்டவர்களாக இருப்பீர்கள். மற்றவர்கள் உங்களை அதிகமாக மதிப்பார்கள்.
நம்பிக்கை மற்றும் உறுதியுடன் செயற்படும் உங்களை தலைமைத்துவ இடங்களில் மக்கள் வைத்து அழகுப்பார்ப்பார்கள். மற்றவர்கள் போல் அல்லாமல் உங்களுக்கு பண்புகள் தனித்துவமாக இருக்கும். வேலையையும் சிந்தித்து செய்வீர்கள். மோதல்களை தீர்ப்பதில் நீங்கள் வல்லவராக இருப்பீர்கள். சில நேரங்களில் பிடிவாத குணத்தை வெளிபடும். ஆனாலும் அதுவும் மற்றவர்களை பெரிதாக பாதிக்காது.
ஸ்கொயர் ஃபுட் ஷேப் (Square Foot Shape)
ஸ்கொயர் ஃபுட் ஷேப் கொண்டவர்களுக்கு கட்டை விரல் தொடங்கி கால்களில் இருக்கும் 5 விரல்களும் ஒரே நீளத்தில் இருக்கும். இவர்கள் மிகவும் பிராக்டிகலாக இருப்பார்கள். பொறுப்புணர்வு அதிகமாக இருக்கும். கடின உழைப்பாளிகளாவும் இருப்பதால் வேலைகளை நேர்த்தியாக செய்வார்கள்.
பிரச்சனைகளுக்கு சிறந்த முறையில் தீர்வு காண இவர்களுக்கு தெரியும். கொடுத்த வாக்கிற்காக அதிகமாக போராடுவார்கள். புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளும் இவர்களுடன் மற்றவர்கள் எளிதில் மோதி வெற்றிப் பெற முடியாது. இலக்குகளை நோக்கி பயணிக்கும் இவர்களை அடக்க யாராலும் முடியாது. குடும்பத்தினர் கூட வாய் கொடுக்கமாட்டார்கள்.
கிரீக் ஃபுட் ஷேப் (Greek Foot Shape)
கிரீக் ஃபுட் ஷேப் எனப்படுவது கால்களில் இருக்கும் கட்டை விரலை விட, அதற்கு அடுத்து இருக்கும் இரண்டாவது கால் விரல் பெரியதாக உள்ளவர்களை குறிக்கும். இந்த வகையான வடிவம் கொண்டவர்கள் படைப்பாற்றல் மிகுந்தவராக இருப்பார். உள்ளுணர்வு மூலம் அதிகமான விடயங்களை முன்பே தெரிந்து கொள்வார்கள்.
மற்றவர்களை விட சுறுசுறுப்பானவர்களாக இருப்பார்கள். எப்போதும் புதிய சவாலை எதிர்க் கொள்ளும் நபராக இருப்பார்கள். நம்பிக்கையுடன் இருப்பதால் இவர்களின் சிந்தனைகள் தெளிவாக இருக்கும். எப்போதும் துணிச்சலாக இருக்கும் இவர்கள் எதையும் பயம் இல்லாமல் செய்வார்கள். நம்பிக்கையுடன் இருப்பதால் கடவுளின் முழு ஆதரவு கிடைக்கும்.