பொதுவாகவே ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதிநிலை, காதல் வாழ்க்கை, விசேட ஆளுமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் நேரடியான தாக்கத்தை கொண்டிருக்கும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்கள் இயல்பாகவே பெண்களை விரைவில் கவரும் ஆற்றல் கொண்டவர்களாகவும், ஏமாற்றும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அப்படி பெண்கள் உட்பட அனைத்து விடயங்களிலும் ஏமாற்றுவதை வாடிக்கையாக கொண்ட ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்த ஆண்கள் மிகவும் மர்மமான இயல்பு கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்களின் தனிப்பட்ட விடயங்களை எப்போதும் ரகசியமதக வைத்துக்கொள்ள வேண்டும் என நினைப்பார்கள்.
இந்த ராசி ஆண்கள் காதல் விடயத்திலும் முழுமையாக தங்களின் உணர்வுகளை துணையிடம் பகிர்ந்துக்கொள்ள மாட்டார்கள். இவர்களின் இந்த குணம் துணையை ஏமாற்றுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.
இவர்கள் ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் எதையும் செய்யவில்லை என்றாலும், முக்கியமாக விடயங்களை கூட துணையிடம் சொல்லாமல் மறைத்து வைக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
தனுசு
தனுசு ராசியில் பிறந்தவ ஆண்கள் சாகச இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் எந்த உறவிலும் ஒரு சிலிர்பை எதிர்ப்பார்க்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இந்த ராசி ஆண்கள் எப்போதும் உறவுகளில் மகிழ்சிச்சி மற்றும் சுதந்திரம் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
இவர்களை கட்டுப்டுத்தி வைக்க நினைக்கும் துணையிடம் இருந்து பெய்யான காரணங்களை சொல்லி உறவில் இருந்து வெளிறேறும் இயல்பு இவர்களிடம் இருக்கும். இவர்கள் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள ஒருபோதும் விரும்பமாட்டார்கள்.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்த ஆண்கள் இரட்டை வேடம் அணிவதிலும், ஏமாற்றுவதிலும் கில்லாடிகளாக இருப்பார்கள்.
இவர்களின் புத்திசாலித்தனத்தால், தங்களின் காரியத்தை சாதித்துவிட்டு இந்த இடத்தில் இருந்து வெளியேறிவிடுவார்கள்.
இவர்கள் மற்றவர்களின் உணர்வு குறித்து சிந்திக்கும் தன்மை அற்றவர்களாக இருப்பார்கள்.இவர்களின் இந்த குணம் வாழ்வில் பல உறவுகளை ஏமாற்றுவதற்கு காரணமாக அடைந்துவிடும்.