பொதுவாகவே அனைத்து பெற்றோரும் தங்களின் குழந்தைகள் தங்களை வயதாகும் போது கவனித்துக்கொள்ள வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். ஆனால் எல்லா பிள்ளைகளுமே பெற்றோரின் ஆசையை நிறைவேற்றுவது கிடையாது.
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்கள் தங்கள் பெற்றோரின் ஆசைக்காக எதையும் செய்ய தயாராக இருப்பார்களாம்.
அப்படி பெற்றோருக்காக தங்களின் உயிரையும் இழப்பதற்கு தயாராக இருக்கும் உலகின் தலைசிறந்த மகன்கள் எந்தெந்த ராசியினர் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
காதல் மற்றும் அன்பின் கிரகமாக அறியப்படும் ரிஷப ராசியில் பிறந்த ஆண்கள் இயல்பாகவே உறவுகள் மீது அதீத அக்கறை மற்றும் பாசம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இந்த ராசியில் பிறந்த ஆண்கள் எந்த உறவிலும் உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்துக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
இவர்கள் தங்கள் பெற்றோரை நிதிரீதியாக பாதுகாப்பது மட்டுமின்றி, அவர்களுக்கு வசதியான மற்றும் பாதுகாப்பான சூழலையும் உருவாக்குகிக்கொடுக்க உண்மையாகவே ஆசைகொண்டவர்களாக இருப்பார்கள்.
கடகம்
கடக ராசிகளில் பிறந்த ஆண்கள் மிகவும் இயல்பாகவே உறவுகள் மீது அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். குறிப்பாக இவர்கள் தாய் சொல்லும் கட்டுப்படும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் தங்கள் பெற்றோருடன் ஆழமான உணர்ச்சிப் பிணைப்பைக் கொண்டுள்ளனர், இவர்கள் பெற்றோருக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பார்கள்.
இவர்கள் பெற்றோருக்காக தங்களின் ஆசைகளையும், தேவைகளையும் கூட புறக்கணித்துவி்ட்டு வாழ தயாராக இருப்பார்கள்.
கன்னி
கன்னி ராசி ஆண்கள் தங்கள் புத்திக்கூர்மைக்கும், திட்டமிடுதலுக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் உறவிலும் சரி, தொழில் விடயங்களிலும் எப்போதும் நேர்த்தியும் முழுமையையும் விரும்புவார்கள்.
இந்த ராசி ஆண்கள் பெற்றோர் சிறு வயதில் தங்களை எப்படி கவனித்துக்கொண்டார்களோ, அதை வி்ட பல மடங்கு அவர்களை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என மனதார ஆசைப்படுவார்கள்.