சில திகதிகளில் பிறந்தவர்களுக்கு அந்த திகதிக்கு எந்த கிரகம் தொடர்புள்ளது என்பதை தெரிந்து அதன்படி நாம் அதற்கேற்ற நிறத்தை பயன்படுத்தினால் எடுக்கும் காரியம் வெற்றி பெறும்.

எண் கணிதத்தின் படி வெவ்வேறு நிறங்கள் பிரபஞ்சத்தில் உள்ள வெவ்வேறு கிரகங்களுடன் சம்பந்தப்பட்டது. ஒவ்வொரு எண், கிரகம் தனித்துவமான நிறம் உள்ளது.

எனவே நமது மோசமான நிலையில் இருக்கும்போது நாம் பிறந்த தேதியில் ஒரு குறிப்பிட்ட எண் இல்லாதபோது, அதை வலுப்படுத்த அல்லது குணப்படுத்த ஒரு கிரகத்தின் நிறத்தைப் பயன்படுத்தலாம். இதன்படி நாம் பிறந்த திகதி அடிப்படையில் எந்த நிறம் அதிர்ஷ்டம் என பார்க்கலாம்.

உங்கள் பிறந்த திகதி இதுவென்றால் அதிர்ஷ்ட நிறம் இது தான் | Lucky Colour According Your Birth Date Numerology

 

எண் 1 எண் 1 ஐச் சேர்ந்தவர்கள், தங்கம், மஞ்சள், ஆரஞ்சு நிறங்களைப் பயன்படுத்தினால் நல்லது. இந்த நிறம் சூரியன் ஆளும் நிறமாகும். இந்தை நிறத்தை அணிந்தால் எதிலும் வெற்றி கிட்டும்.  
எண் 2 இந்த 2ம் இலக்கத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட நிறம் வெள்ளை, கிரீம், வெள்ளி போன்ற நிறங்களாகும். இதை முக்கியமான காரணங்களுக்கு பயன்படுத்தினால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். 
உண் 3 இந்த 3ம் இலக்கத்தில் பிறந்தவர்கள் மஞ்சள், ஊதா, துரு நிறங்களை பயன்படுத்தலாம் இந்த நிறம் அவர்களுக்கு வெற்றியை கொடுக்கும்.
எண் 4 இந்த 4ம் இலக்கத்தில் பிறந்தவர்கள் நீலம், சாம்பல், மற்றும் கடல் பச்சை நிறங்களை பயன்படுத்தலாம். இது ராகு கிரகத்தை குறிப்பதால் வாழ்வில் சிறப்பான நன்மைகள் தேடி வரும். 
எண் 5 எண் 5ம் இலக்க நபர்கள் புதன் கிரகத்துடன் தொடர்புடையவர்கள். அவர்கள் பச்சை மற்றும் வெள்ளை நிறத்தை பயன்படுத்தினால் சிறப்பான நன்மைகள் அவர்களுக்கு கிடைக்கும். 
எண் 6 6ம் இலக்கத்தில் பிறந்தவர்கள் சில முக்கியமான விடயங்களுக்கு நீலம், இளஞ்சிவப்பு, மற்றும் வெள்ளை நிறங்களை பயன்படுத்தலாம். இது இவர்களுக்கு வெற்றியை கொடுக்கும்.
எண் 7 இந்த எண்ணிற்கு அதிபதி கேது எனவே கேது கிரகத்தின் நிறத்தை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் பச்சை, வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தை அணிந்தால் நன்மை பெறலாம்.  
எண் 8 எண் 8ம் எண்ணை அளும் கிரகம் சனி. எனவே இந்த திகதியில் பிறந்தவர்கள் நீலம், கருப்பு, மற்றும் ஊதா போன்ற நிறங்களை பயன்படுத்தினால் நல்லது. 
எண் 9 9ம் இலக்கத்தில் பிறந்தவர்கள் செவ்வாய் கிரகத்துடன் தொடர்புடையவர்கள். இவர்கள் தங்களுக்கு தேவையான வெற்றி பெற ஆசைப்படும் சில விடயங்களுக்கு கருஞ்சிவப்பு, சிவப்பு, மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களை பயன்படுத்தலாம்.  

உங்கள் பிறந்த திகதி இதுவென்றால் அதிர்ஷ்ட நிறம் இது தான் | Lucky Colour According Your Birth Date Numerology