பொதுவாக நாம் அனைவரும் காலையில் இட்லி, தோசை மற்றும் பொங்கல் தான் அதிகமாக சாப்பிடுவோம். இதை தவிர்த்து ஓட்ஸ் போன்று ஆரோக்கியம் தரும் டயட் உணவுகளையும் சாப்பிடுவோம்.

தினமும் ஒரே மாதிரியான உணவுகளை சாப்பிட்டால் காலையுணவு என்றால் ஒரு சலிப்பு வந்து விடும். இதனை பெரியவர்களை விட சிறியவர்களிடம் அதிகமாக பார்க்கலாம்.

தினமும் விதம் விதமான ரெசிபிகள் செய்யும் பொழுது வெளியில் சாப்பிடுவதை விரும்பாமல் குழந்தைகள் வீட்டிலேயே சாப்பிட்டு விடுவார்கள்.

அந்த வரிசையில், ஓட்ஸ் ரவா இட்லி தற்போது சமூக வலைத்தளங்களில் உள்ள பிரபலமான உணவுகளில் ஒன்றாக உள்ளது. ரவை, கேரட் போன்ற ஆரோக்கிய பலன்கள் அதிகமாக இருக்கும் பொருட்களை சேர்க்கப்படுதால் வீட்டிலுள்ள பெரியவர்களுக்கும் சாப்பிட கொடுக்கலாம்.

சாக்ஷி அகர்வால் சாப்பிடும் ஓட்ஸ் ரவா இட்லி.. 15 நிமிடத்தில் செய்வது எப்படி? | Oatmeal Rava Idli Recipe In Tamil

அப்படியாயின், ஆரோக்கியமான ஓட்ஸ் ரவா இட்லி எப்படி தயாரிக்கலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • அவல்- 1 கப் அளவு (ஊறவைத்தது)
  • ஓட்ஸ்- 1 கப்
  • வறுத்த ரவை- 1.5 கப்
  • சில வறுத்த பருப்புகள் - 1 கப்
  • இட்லி மா- கொஞ்சம்

மேலே கொடுக்கப்பட்ட பொருட்களை வீட்டிலுள்ளவர்களின் அடிப்படிடையில் எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

சாக்ஷி அகர்வால் சாப்பிடும் ஓட்ஸ் ரவா இட்லி.. 15 நிமிடத்தில் செய்வது எப்படி? | Oatmeal Rava Idli Recipe In Tamil

அந்த கலவையுடன் உப்பு, சோடா உப்பு, துருவிய கேரட், கொத்தமல்லி இலைகள் கொஞ்சமாக கலந்து கொள்ளவும்.

கலவையுடன் இட்லி மாவை கொட்டி நன்றாக கலந்து விட்டு அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

சாக்ஷி அகர்வால் சாப்பிடும் ஓட்ஸ் ரவா இட்லி.. 15 நிமிடத்தில் செய்வது எப்படி? | Oatmeal Rava Idli Recipe In Tamil

அதன் பின்னர், இட்லி தட்டில் தேவையான அளவு இட்லி மாவை ஊற்றி வேக வைத்து இறக்கவும்.

இப்படி செய்தால் ஓட்ஸ் ரவா இட்லி தயார். விருப்பத்திற்கு ஏற்ப காய்கறிகள் சேர்க்கலாம்.