வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.

செவ்வாய் பெயர்ச்சியால் அதிர்ஷ்ட பெறும் ராசிக்காரர்கள் | Astrology Sevvai Peyarchiyal Athirstam Perum Rasi

ஆண்டின் இறுதியில் தனுசு ராசிக்கு செல்லும் செவ்வாயின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது  தனுசு ராசிக்கு செல்லும் செவ்வாயால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் நாம் இங்கு பார்ப்போம். 

செவ்வாய் பெயர்ச்சியால் அதிர்ஷ்ட பெறும் ராசிக்காரர்கள் | Astrology Sevvai Peyarchiyal Athirstam Perum Rasi

மேஷம்

மேஷ ராசியின் 9 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். சிலருக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலையில் நல்ல முன்னேற்றங்களைக் காண்பீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்கும். புதிய திட்டங்களில் முதலீடுகளை செய்தால் நல்ல பலனைப் பெறலாம். முக்கியமாக நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

செவ்வாய் பெயர்ச்சியால் அதிர்ஷ்ட பெறும் ராசிக்காரர்கள் | Astrology Sevvai Peyarchiyal Athirstam Perum Rasi

விருச்சிகம்

ராசியின் 2 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். புதிய திறன்களை வளர்த்துக் கொள்வீர்கள். ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு புதிய திட்டங்களில் பணிபுரியும் வாய்ப்புக்கள் தேடி வரும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வெற்றிகள் குவியும்.

செவ்வாய் பெயர்ச்சியால் அதிர்ஷ்ட பெறும் ராசிக்காரர்கள் | Astrology Sevvai Peyarchiyal Athirstam Perum Rasi

மீனம்

மீன ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும். பணியிடத்தில் புதிய திட்டங்களில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழிலதிபர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். ரியல் எஸ்டேட், மருத்துவ துறையில் இருப்பவர்கள் குறிப்பிடத்தக்க லாபத்தைப் பெறுவார்கள்.

செவ்வாய் பெயர்ச்சியால் அதிர்ஷ்ட பெறும் ராசிக்காரர்கள் | Astrology Sevvai Peyarchiyal Athirstam Perum Rasi