ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றியும், மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்தும் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் இறுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.

செவ்வாய் சுக்கிரனின் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் | Astrology Sevvai Sukran Serkai Athirsta Rasikarar

இந்த புதிய ஆண்டின் தொடக்கத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் மகர ராசியில் நுழையவுள்ளார். இந்த மகர ராசியில் ஏற்கனவே அசுரர்களின் குருவாக கருதப்படுபவரும் மற்றும் செல்வத்தை அளிப்பவருமான சுக்கிரன் பயணித்து வருகிறார். இதனால் மகரத்தில் செவ்வாய் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழவுள்ளது.

2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒன்றிணையும் செவ்வாய் சுக்கிரனின் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என நாம் இங்கு பார்ப்போம். 

செவ்வாய் சுக்கிரனின் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் | Astrology Sevvai Sukran Serkai Athirsta Rasikarar

ரிஷபம்

2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ரிஷப ராசியின் 9 ஆவது வீட்டில் செவ்வாய் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். சமூகத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். உறவினர்களுடனான உறவு வலுவடையும்.

செவ்வாய் சுக்கிரனின் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் | Astrology Sevvai Sukran Serkai Athirsta Rasikarar

துலாம்

2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் துலாம் ராசியின் 4 ஆவது வீட்டில் செவ்வாய் சுக்கிரனின் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் வசதிகளும், ஆடம்பரங்களும் அதிகரிக்கும். பரம்பரை சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். தாயாருடனான உறவு சிறப்பாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதுவரை பணப் பிரச்சனைகளை சந்தித்து வந்தால், அதிலிருந்து நிவாரணம் கிடைக்கும். நிதி ரீதியாக நல்ல வெற்றியைக் காண்பீர்கள்.

செவ்வாய் சுக்கிரனின் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் | Astrology Sevvai Sukran Serkai Athirsta Rasikarar

மகரம்

2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மகர ராசியின் முதல் வீட்டில் செவ்வாய் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கைத் துணை நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் வாய்ப்புள்ளது. முக்கியமாக புதிய வீடு, வானம் அல்லது சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.

செவ்வாய் சுக்கிரனின் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் | Astrology Sevvai Sukran Serkai Athirsta Rasikarar