இட்லி தோசைக்கு பக்காவாக பொருந்தும் நெல்லிக்காய் தொக்கு இனிப்பு புளிப்பு சுவையில் எப்படி செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்துக்கள் ஏராளமாக இருக்கின்றன. மேலும் இதில் நெல்லிக்காய் செரிமானத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், வைட்டமின் சி குறைபாட்டைப் போக்கவும் உதவுகிறது.

இது இரத்தத்தைச் சுத்திகரித்து, இரத்த சோகையைப் போக்கவும், இதயத்தை வலுப்படுத்தவும், சருமத்தை ஆரோக்கியமாக்கவும் உதவுகிறது. இதன் சுவை கொஞ்சம் கசப்பான இருப்பதால் பலரும் இதை சாப்பிட விரும்புவதில்லை.

எனவே இந்த சத்துக்களை அப்படியே உடலுக்கு எடுத்துக்கொடுக்கும் வகையில் இதில் தொக்கு செய்தால் எப்படி இருக்கும் வகையில் இனிப்பு புளிப்பு சுவையில் தொக்கு எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

தலைமுடியை வலுவாக்கும் நெல்லிக்காய் தொக்கு - இனிப்பு புளிப்பு சுவையில் ரெசிபி இதோ | Healthy Tasty Side Dish For Idli Dosa Amla Thokku

தேவையான பொருட்கள்

  • 12நெல்லிக்காய்
  • 2டேபிள் ஸ்பூன்
  • ஊறுகாய் மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
  • பெருங்காயம் 1/4 கப்
  • ஸ்பூன் நல்லெண்ணெய் உப்பு, தாளிக்க கடுகு, மஞ்சள்தூள் 

தலைமுடியை வலுவாக்கும் நெல்லிக்காய் தொக்கு - இனிப்பு புளிப்பு சுவையில் ரெசிபி இதோ | Healthy Tasty Side Dish For Idli Dosa Amla Thokku

செய்யும் முறை

நெல்லிக்காயை நன்றாக கழுவி துடைத்து அதை ஆவியில் வேக விட்டு எடுத்துக்கொள்ளவும். வேக வைத்து வைத்திருக்கும் நெல்லிக்காய்களை உதிர்த்து வைக்க வேண்டும்.

பின்னர் அடுப்பில் பாத்திரத்தை வைத்து 2ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் உரித்து வெச்சிருக்கும் நெல்லிக்காய் சேர்த்து 2நிமிடம் வதக்கவும். அத்துடன் கல்லுப்பு, மற்றும் ஊறுகாய் மிளகாய் தூள் சேர்த்து, கொஞ்சம் எண்ணை சேர்த்து நன்கு வதக்கவும்.

தலைமுடியை வலுவாக்கும் நெல்லிக்காய் தொக்கு - இனிப்பு புளிப்பு சுவையில் ரெசிபி இதோ | Healthy Tasty Side Dish For Idli Dosa Amla Thokku

இவை அனைத்தும் ஓன்று சேர்ந்து வரும்போது பாத்திரத்தில் இருந்து கீழே இறக்கி விடவும். கரண்டியில் மீதி எண்ணெய் ஊற்றி சூடு பண்ணி கடுகுவெடிச்சதும் அடுப்பை ஆப் செய்து மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நெல்லிக்காய் தொக்கில் ஊற்றி கலந்து விடவும்.

இப்போது சுவையான நெல்லிக்காய் தொக்கு தயார். சுவையான உடல் ஆரோக்கியதுக்கேத்த நெல்லிக்காய் தொக்கை சாதம், தோசை, சப்பாத்தியுடன் தொட்டு சாப்பிட அருமை யாக இருக்கும்.