பொதுவாக ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரத்துக்கும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களுக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது.

அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்கள் ரொமான்ஸ் செய்வதில் கில்லாடிகளாகவும் பெண்களின் மனதை புரிந்து நடந்துக்கொள்ளும் குணம் கொண்டவர்களாகவும்  இருப்பார்களாம்.

பெண்களை புரிந்துக்கொள்வதில் கில்லாடிகளான 3 ஆண் ராசிகள்... யார் யார்ன்னு தெரியுமா? | Loveable And Most Romantic Male Zodiac Signs

அப்படி பெண்களுக்கு உண்மையான பாசத்தையும், மரியாதையையும் கொடுக்கக்கூடிய  ஆண் ராசிகள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கடகம்

பெண்களை புரிந்துக்கொள்வதில் கில்லாடிகளான 3 ஆண் ராசிகள்... யார் யார்ன்னு தெரியுமா? | Loveable And Most Romantic Male Zodiac Signs

சந்திரனால் ஆளப்படும் கடக ராசி ஆண்கள் ஆழ்ந்த உணர்ச்சிவசப்படும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் இந்த குணம் பெண்களை எளிதில் புரிந்துக்கொள்ள பெரிதும் துணைப்புரிகின்றது. 

இவர்கள் பெண்கள் மீது அதிக மதிப்பும் மரியாதையும், கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த ராசி ஆண்கள் தங்களின் வாழ்க்கை துணையின் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்ளாக இருப்பார்கள். 

எப்படி நடந்துக்கொண்டால் பெண்களுக்கு பிடிக்கும் என்ற வித்தை அறிந்த கில்லாடிகளாவும், ரொமான்ஸ் விடயத்திற்கு பெயர் பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.இவர்களை வாழ்க்கை துணையாக அடைவதே பெருமட வரம். 

கன்னி

பெண்களை புரிந்துக்கொள்வதில் கில்லாடிகளான 3 ஆண் ராசிகள்... யார் யார்ன்னு தெரியுமா? | Loveable And Most Romantic Male Zodiac Signs

கன்னி ராசி ஆண்கள் எந்த வேலை செய்தாலும் அதில், முழுமையும், நேர்த்தியும் இருக்க வேண்டும் என்பதில், உறுதியாக இருப்பார்கள். 

அவர்கள் இயல்பாகவே நிதானமானவர்கள் மற்றும் மற்றவர்களை புரிந்து நடந்துக்கொள்ளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் வார்த்தைகளை விட செயல்கள் மூலம் அன்பை வெளிப்படுத்த விரும்புகிறார்கள்.

இவர்களின் இந்த குணம் வெகுவாக பெண்களை கவருகின்றது. துணையின் அனைத்து செயல்களிலும் உதவியாக இருப்பார்கள். குறிப்பான தனது துணையை யாரிடடும் விட்டுக்கொடுக்கவே மாட்டார்கள். 

விருச்சிகம்

பெண்களை புரிந்துக்கொள்வதில் கில்லாடிகளான 3 ஆண் ராசிகள்... யார் யார்ன்னு தெரியுமா? | Loveable And Most Romantic Male Zodiac Signs

புளூட்டோவால் ஆளப்படும் விருச்சிக ராசி ஆண்கள், மர்மமாக குணத்துக்கும், ரகசிய இயல்புக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.

ஆனால் தங்களை நம்பி வந்த பெண்ணிடம் எல்லா விடயத்தையும் பகிர்ந்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். விருச்சிக ராசிக்காரர்கள் காதலை மிகவும் தனிப்பட்டதாக கருதுகிறார்கள்,

அவர்களின் உணர்ச்சி ரீதியாக அணுகுமுறை பெண்களை சிறப்பாக புரிந்துக்கொள்ள அவர்களுக்கு துணைப்புரிகின்றது. இவர்கள் ஒரு நல்ல துணையாக இருப்பார்கள்.