ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் அடிக்கடி தனது நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது மட்டுமின்றி, மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்தோ அல்லது நிலைகளின் மூலமோ, சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும்.

அந்த வகையில் ஜனவரி 20 ஆம் திகதி கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதனும், நீதிமான் சனி பகவானும் சேர்ந்து லாப திருஷ்டி யோகத்தை உருவாகியுள்ளனர்.

சனி-புதன் உருவாக்கிய லாப திருஷ்டி யோகம் ; இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப் போகிறது | Profit Astrology By Saturn Mercury Alignment

தனுசு: சனி மற்றும் புதனில் உருவாகியுள்ள லாப திருஷ்டி யோகத்தால் இன்று முதல் தனுசு ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். எந்த வேலையை செய்தாலும் அதில் நல்ல வெற்றி கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். முக்கியமாக சனி மற்றும் புதனின் அருளால் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும்.

கும்பம்: சனி மற்றும் புதனால் உருவாகியுள்ள லாப திருஷ்டி யோகத்தால் இன்று முதல் கும்ப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது

கன்னி: சனி மற்றும் புதனில் உருவாகியுள்ள லாப திருஷ்டி யோகத்தால் இன்று முதல் கன்னி ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். தைரியமும், வீரமும் அதிகரிக்கும். ரிஸ்க் எடுத்தாலும் நிறைய பணத்தை சம்பாதிப்பீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும்.