கோடை வெயிலுக்கு சில்லுன்னு ஜிகர்தண்டா எவ்வாறு வீட்டிலேயே செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

கோடை காலம் ஆரம்பித்துவிட்டாலே வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். வெயில் தாக்கத்தினால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

வெயிலின் தாக்கத்தினால் உடம்பில் நீர்ச்சத்து குறைந்துவிடுகின்றது. நீர்ச்சத்தை அதிகரிக்கும் தர்பூசணி, வெள்ளரிக்காய், மோர், இளநீர் இவற்றினை பலரும் வாங்கி சாப்பிடுகின்றனர்.

ஆனால் வெயிலுக்கு இதமாக இருக்கும் ஜிகர்தண்டாவை பெரும்பாலான நேரங்களில் கடைகளில் தான் வாங்கி சாப்பிட்டிருப்போம். இந்நிலையில் அதனை வீட்டில் எவ்வாறு செய்து சாப்பிடலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

சர்க்கரை
பால்
பிரஷ் கிரீம்
மில்க் மெய்ட்
கேரம்‌மில்க்
பவுடர் சுகர்
பாதாம் பிசின்
நன்னாரி சர்பத்

கோடை வெயிலுக்கு ஜல்லுனு ஜிகர்தண்டா... வீட்டிலேயே எவ்வாறு தயார் செய்வது? | How To Make Famous Jigarthanda At Home For Summer

 

செய்முறை

சர்க்கரை கால் கப் எடுத்து அதனை சூடுசெய்து செந்நிறமாக மாறியதுடன் அதில் சுடுதண்ணீர் ஊற்றி தனியாக எடுத்து வைக்கவும்.

ஒரு லிட்டர் பாலை காய்ச்சி அதில் இரண்டு ஸ்பூன் சர்க்கரையை கலந்து பிரிட்ஜில் அரை மணிநேரம் வைத்து பாலாடை தயார் செய்யவும்.

பின்பு பிரஷ் கிரீம், மில்க் மெய்ட் மற்றும் சர்க்கரை பாகு மற்றும் பாலாடை இவற்றினை சேர்த்து ப்ரிட்ஜில் இரவு முழுவதும் வைத்து எடுத்தால் ஐஸ்கிரீம் தயார்.

ஒரு பாத்திரத்தில் பால் எடுத்துக் கொண்டு, அதில் சர்க்கரை பாகு, கேரம் மில்க் மற்றும் பவுடர் சுகர் இவற்றினை சேர்த்து எடுத்துக் கொள்ளவும்.

பின்பு ஊற வைத்த பாதாம்பிசின் நன்னாரி சர்பத் இவற்றுடன் ஐஸ்கீரீம் சேர்த்து வைத்து வைத்தால் ஜில்லான வெயிலுக்கு இதமான ஜிகர்தண்டா தயார்.

கோடை வெயிலுக்கு ஜல்லுனு ஜிகர்தண்டா... வீட்டிலேயே எவ்வாறு தயார் செய்வது? | How To Make Famous Jigarthanda At Home For Summer