ஐஸ்க்ரீம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். வெண்ணிலா, சாக்லேட், ஸ்ட்ராபெர்ரி என விதவிதமான சுவைகளில் சில நூறு அல்லது அதிகபட்சம் சில ஆயிரம் ரூபாய்க்குள் வாங்கிச் சாப்பிடுவோம்.

ஆனால் ஒரு ஐஸ்க்ரீமின் விலை ரூ.5.5 லட்சம் என்றால் நம்ப முடிகிறதா? ஜப்பானிய நிறுவனமான செல்லாட்டோ (Cellato) தயாரித்துள்ள ‘பியாகுயா (Byakuya)’ என்ற ஐஸ்க்ரீம் தான் உலகின் மிக விலையுயர்ந்த ஐஸ்க்ரீமாக கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்றுள்ளது.

5 லட்சத்துக்கு விற்கப்படும் உலகின் மிக விலையுயர்ந்த ஐஸ்க்ரீம்! அப்படி என்ன ஸ்பெஷல்? | Most Expensive Ice Cream In The World

அப்படி என்ன இருக்கின்றது? 

புதுமையான ‘ஃப்யூஷன்’ சமையல் பாணிக்கு பெயர் பெற்ற ‘ரிவி’ உணவகத்தின் தலைமைச் சமையல்கலைஞர் தடாயோஷி யமடா இதை உருவாக்கியுள்ளார்.

இத்தாலியின் ஆல்பா பகுதியில் இருந்து பெறப்படும் விலை உயர்ந்த வெள்ளை ட்ரஃபிள், உண்ணக்கூடிய தங்கத் தகடு, பார்மிஜியானோ ரெஜியானோ சீஸ் மற்றும் ‘சகே’ தயாரிப்பில் மீதமாகும் ‘சகே லீஸ்’ போன்ற அரிய பொருட்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

5 லட்சத்துக்கு விற்கப்படும் உலகின் மிக விலையுயர்ந்த ஐஸ்க்ரீம்! அப்படி என்ன ஸ்பெஷல்? | Most Expensive Ice Cream In The World

 

இந்த ஐஸ்க்ரீமின் விலை 873,400 ஜப்பானிய யென், அதாவது சுமார் ரூ.5.5 லட்சம். இதன் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் இதில் பயன்படுத்தப்படும் வெள்ளை ட்ரஃபிள்தான்; அதன் விலை கிலோ ஒன்றுக்கு சுமார் ரூ.12 லட்சம் வரை செல்கிறது.

ஜப்பானிய மற்றும் ஐரோப்பிய உயர்தரப் பொருட்களை ஒரே ஐஸ்க்ரீமில் இணைப்பதே ‘பியாகுயா’வின் சிறப்பம்சம். சரியான சுவையை உருவாக்க ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக செல்லாட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளயும் குறிப்பிடத்தக்கது.