பல வெற்றிப்படங்களில் சிறுசிறு கேரக்டர்களில் நடித்து வந்த நடிகர் மணிகண்டனுக்கு ஜெய்பீம் திரைப்படம் பெரிய வரவேற்பை கொடுத்தது. அவரது நடிப்பும் பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தது. 

சூர்யா நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு நேரடியாக ஓ.டி.டி தளத்தில் வெளியான படம் ஜெய்பீம். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம் சில சர்ச்சைகள் இருந்தாலும், ஓ.டி.டி தளத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தை ரீ-ரிலீஸாக தியேட்டரில் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது. 

சூர்ய வழக்கறிஞராக நடித்திருந்த இந்த படத்தில், மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ராஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். குறிப்பாக இந்த படத்திற்கு முன்பு, ரஜினிகாந்தின் காலா உட்பட பல வெற்றிப்படங்களில் சிறுசிறு கேரக்டர்களில் நடித்து வந்த நடிகர் மணிகண்டனுக்கு ஜெய்பீம் திரைப்படம் பெரிய வரவேற்பை கொடுத்தது. அவரது நடிப்பும் பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தது. 

குறிப்பாக இந்த படத்தில் நடித்த லிஜோமோல் ஜோஸ் - மணிகண்ன் இடையெயான காட்சிகள் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. ஜெய்பீம் படம் குறித்து சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் மணிகண்டன், இந்த படத்தின் ப்ரீவியூ ஷோ பார்க்கும்போது, நடந்த சம்பவம் குறித்து பேசியுள்ளார். இந்த நேர்காணலில், உங்க அம்மா - அப்பாவை முதன் முதலில் கூட்டிச்சென்ற படம் எது என்று கேட்க, அதற்கு பதில் அளித்த மணிகண்டன், எங்க அம்மா அப்பா எந்த படத்திற்கும் வரவில்லை. 

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் நான் சினிமாவில் இருப்பதே அவங்களுக்கு பிடிக்காது. முதன் முதலில் ஜெய்பீம் படத்தின் ப்ரீவியூ தியேட்டருக்கு அழைத்துச்சென்றேன். அப்போது நான் அடி வாங்குவது, பாம்பு பிடிப்பது, இறந்து கிடப்பது என அதை எல்லாம் பார்த்து அழுது தியேட்டரில் மயங்கி விழுந்துவிட்டார். அதன்பிறகு, இயக்குனரிடம் சென்று யார் உங்களுக்கு பர்மிஷன் கொடுத்தது. உங்கள் பிள்ளையாக இருந்தால் இப்படி பாம்பு பிடிக்க விடுவீங்களா? என்று கேட்டுவிட்டு என்னை அடித்து இனிமேல் நீ இந்த மாதிரி நடிக்கவே கூடாது என்று சொன்னார்.