குன்னத்தூரில் பேக்கரி வைத்து நடத்தி வந்தவர் செல்வராஜ் (வயது 22). இவரது உறவினர் கண்ணன் (32). இவர்கள் இருவரும் பெருமாநல்லூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் சென்றனர். மோட்டார்சைக்கிளை கண்ணன் ஓட்டிவந்தார். செல்வராஜ் பின்னால் அமர்ந்து வந்தார். பெருமாநல்லூர் ஊராட்சி அலுவலகம் அருகே வந்த போது, எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோட்டார்சைக்கிள் மோதியது. இதில், இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் செல்வராஜ் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். கண்ணன் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சாலை தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
- Master Admin
- 23 November 2020
- (518)
தொடர்புடைய செய்திகள்
- 22 November 2020
- (580)
10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை-...
- 13 May 2021
- (770)
பழுதடைந்த நவீன எரிவாயு தகன மேடையை கலெக்ட...
- 02 December 2020
- (756)
விஷம் குடித்து பெண் பலி- துக்கம் தாங்க ம...
யாழ் ஓசை செய்திகள்
5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகின
- 02 September 2026
ஹோர்முஸ் நீரிணையில் சவூதி எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இருவர் பலி
- 02 September 2026
சடுதியாக குறைந்த தங்க விலை: வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்
- 02 September 2026
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான வானிலை முன்னறிவிப்பு...
- 02 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
