காலி பத்தேகம கிறிஸ்தவ மகளீர் வித்தியாலயத்தில் மாணவி ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

குறித்த பாடசாலையின் தரம் 12 இல் கல்வி கற்று வந்த இவர் கடந்த 25 ஆம் திகதி இறுதியாக பாடசாலைக்கு சென்றுள்ளார்.

வீட்டில் இருந்த நோயாளர் கராபிடிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த மாணவியுடன் நெருங்கிப் பழகிய மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 51 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகபத்தேகம பொது சுகாதார பரிசோதகர் கே.பி.நவரத்ன தெரிவித்தார்.