மதுபோதை மற்றும் பாதுகாப்பற்ற முறையில் வாகனம் ஓட்டும் சாரதிகளை கைது செய்வதற்கு வார இறுதி நாட்களில் விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படவிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக விதிக்கப்பட்ட போக்குவரத்து கட்டுப்பாடுகளினால் கடந்த காலங்களில், விபத்துக்களால் நிகழும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை குறைவடைந்திருந்தது.
எனினும், மீண்டும் உயிரிழப்புக்கள் அதிகரித்து வருவதாக தரவுகள் குறிப்பிடுகின்றன. நேற்று முன்தினம் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி பத்து பேர் உயிரிழந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் அதிகளவான வாகன விபத்துகள் டிசெம்பர் மாதம் 20ஆம் திகதியிலிருந்து ஜனவரி மாதம் 5ஆம் திகதி வரையான காலப்பகுதியிலும், ஏப்ரல் மாதம் 10ஆம் திகதியிலிருந்து 20ஆம் திகதி வரையான காலப்பகுதியிலும் நிகழ்வதாக அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதேவேளை, நேற்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரங்களில் முகக்கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியைப் பேணாத 37 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
வார இறுதி நாட்களில் விசேட சுற்றிவளைப்பு
- Master Admin
- 19 December 2020
- (958)

தொடர்புடைய செய்திகள்
- 14 November 2020
- (332)
23 ஆம் திகதி பாடசாலைகளை மீண்டும் திறப்பத...
- 18 August 2024
- (182)
ரக்சா பந்தன் 2024: இந்த ராசிப்படி ராக்கி...
- 25 February 2025
- (107)
குங்குமப்பூவில் இவ்வளவு நன்மையா? கட்டாயம...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
- 26 July 2025
இத தவறாம செய்ங்க.. தலைமுடி முழங்கால் வரை வளரும்
- 23 July 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.