ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மஜ்மா நகர் கிராமத்தில் உயிரிழந்த நிலையில் ஒருவரின் சடலம் இன்று (02) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மஜ்மா நகர் கிராமத்தில் வீட்டுத் தோட்டம் பராமரித்து வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான முஹமது கனீபா சுலைமா லெப்பை (வயது 52) என்பவரே இவ்வாறு மரணமடைந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த நபரின் தோட்டத்திற்கு அருகாமையில் உள்ள ஒருவர் இவரது நடமாட்டம் காணப்படவில்லை, வீட்டின் மின் விளக்குகள் அணைக்கப்படவில்லை என்பதால் பார்ப்பதற்கு சென்ற சமயம் இவர் வீட்டின் முற்றத்தில் மரணமடைந்துள்ளதை கண்ட நபர் அவரது குடும்பத்தாருக்கும், பிரதேச கிராம அதிகாரிக்கும் அறிவித்ததை தொடர்ந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த மரணம் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்க்கப்பட்ட விவசாயி
- Master Admin
- 02 January 2021
- (441)

தொடர்புடைய செய்திகள்
- 11 November 2020
- (390)
கொழும்பு, கட்டுநாயக்க அதிவேக மார்க்கத்தி...
- 01 August 2024
- (447)
சிம்மத்தில் வக்ரமடையும் புதன்: பணவெள்ளத்...
- 21 December 2023
- (220)
வயதானாலும் சருமத்தில் சுருக்கம் வரவே கூட...
யாழ் ஓசை செய்திகள்
நெல் கொள்வனவு குறித்து வெளியான தகவல்
- 02 July 2025
யாழ். உள்ளிட்ட பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு
- 02 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.