மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடலுக்கு மருத்துவ ஊழியர்கள் நடனமாடும் வீடியோ இணையத்தில் உலா வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதைக்கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தவும் முன் களத்தில் இருந்து பணியாற்றி வருகின்றனர் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளில் பணியாற்றும் ஊழியர்கள்.

நேரம் பார்க்காமல் முகக்கவசம் உள்ளிட்ட உபகரணங்களை அணிந்து கொண்டு பணியாற்றும் மருத்துவ ஊழியர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாவதும் இயல்பானதே.

இந்நிலையில் விஜய்யின் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடலுக்கு மருத்துவமனை ஊழியர்கள் இணைந்து நடனமாடும் வீடியோ இணையத்தில் உலா வருகிறது.

இதனிடையே இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டிருந்த வீடியோவில் பிரிட்டனில் குடியிருப்பு வாசிகள் இணைந்து தனி மனித இடைவெளியைக் கடைப்பிடித்து வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி இருந்தனர்.