யாழ். பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வேலைகளை பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர்.
யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவுத் தூபி கடந்த 8 ஆம் திகதி இரவு பல்கலைக்கழக நிர்வாகத்தினால் இடித்து அழிக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து தொடர் எதிர்ப்பு போராட்டத்தை முன்டுத்திருந்தனர்.
பின்னர் சில மாணவர்களால் போராட்டம் உணவு தவிர்ப்பு போராட்டமாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மாணவர்களின் போராட்டத்திற்கு உலகின் பல இடங்களில் இருந்தும் ஆதரவு பெருகியதால் கடந்த 11 ஆம் திகதி, தூபி இடித்து அழிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் தூபி அமைப்பற்கு மாணவர்களின் பங்குபற்றலோடு துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராசாவினால் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து இன்றையதினம் அத்திவாரம் வெட்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணிகள் ஆரம்பம்
- Master Admin
- 15 January 2021
- (328)
தொடர்புடைய செய்திகள்
- 16 February 2024
- (660)
பெண்கள் மெட்டி அணிவதன் ரகசியம் தெரியுமா?...
- 30 October 2020
- (703)
நாட்டின் அனைத்து பகுதிகளிலும் எழுமாற்றான...
- 17 July 2020
- (486)
கொரோனா வைரஸ் தொற்று: இலங்கையர்களின் சடலங...
யாழ் ஓசை செய்திகள்
நீர் கட்டண திருத்தம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!
- 20 January 2025
அஸ்வெசும கொடுப்பனவு குறித்து வெளியான தகவல்
- 20 January 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
சக்கரை பொங்கலின் சுவையை அதிகப்படுத்தணுமா? இதை சேர்த்தால் போதும்
- 11 January 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.