மார்ச் மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் கும்பத்தில் சூரியன், சுக்கிரன், குரு, சனி, புதன் மகரம் ராசியில் சஞ்சரிகிறார். செவ்வாய் ரிஷபம் ராசியில் ராகு உடன் பயணிக்கிறார். கேது விருச்சிகம் ராசியில் சஞ்சரிக்கிறார்.

இந்த மாதத்தில் கிரகங்களின் மாற்றத்தை பார்த்தால் 11ஆம் தேதி புதன் கும்பம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.

14ஆம் தேதி சூரியன் மீனம் ராசியில் பயணம் செய்கிறார்.

மார்ச் 16ஆம் தேதி சுக்கிரன் மீனம் ராசியில் உச்சமடைகிறார். மார்ச் இறுதியில் புதன் சூரியன், சுக்கிரன் உடன் இணைந்து நீசபங்கமடைகிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டத்தையும் திடீர் பண வரவையும் தரப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்களே மார்ச் மாதத்தில் முதல் 15 நாட்கள் கிரகங்கள் லாப ஸ்தானத்திலும், பிற்பகுதியில் விரைய ஸ்தானத்திலும் கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

இரண்டாம் வீட்டில் ராகு செவ்வாய், எட்டாம் வீட்டில் கேது, பத்தாம் வீட்டில் சனி, குரு, புதன், லாப ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், என சஞ்சரிக்கின்றன. குடும்ப தேவைகளுக்குத் தேவையான அளவிற்கு பணம் வரும். பண விசயமாக யாருக்கும் பெரிய அளவில் வாக்குறுதி கொடுக்க வேண்டாம்.

 

வேலையில் கவனம் செலுத்துவது அவசியம். புதிய வேலை, புதிய இடமாற்றம் வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருப்பீர்கள். லாப ஸ்தானத்தில் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதியும், களத்திர குடும்ப ஸ்தான அதிபதியும் இணைந்திருக்கின்றனர். அரசு சார்ந்த வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல மாதம்.

குருவின் பயணம் சாதகமாக உள்ளது. பாக்யாதிபதி குருவின் பார்வை தன ஸ்தானம், சுக ஸ்தானத்திற்கு கிடைக்கிறது. உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் செவ்வாய் ராகு சேர்ந்திருப்பது சர்ப்ப தோஷத்தை தருகிறது. வார்த்தைகளில் கவனம் தேவை. அவசரப்பட்டு பேச வேண்டாம். குடும்பத்தில் தம்பதியரிடையே கூட கவனமாக பேச வேண்டும்.

வம்புகள் வர வாய்ப்பு உள்ளது. வாக்கு ஸ்தானத்தில் உள்ள கிரகங்கள் சாதகமற்றதாக உள்ளது. திருமண பொருத்தம் சுப காரியங்கள் பார்க்கும் போது கவனமாக பார்க்க வேண்டும். அலுவலகத்தில் பேசும் போது கவனம் தேவை. உயரதிகாரிகளிடம் பேசும் நிதானம் தேவை. குருவின் பார்வை உங்கள் வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு கிடைப்பதால் நீங்கள் கொஞ்சம் சிக்கல்களில் இருந்து தப்பிக்கலாம். திருமணம் சுப காரிய முயற்சிகளில் ஏற்பட்ட தடைகள் விலகும்.

மார்ச் 12ஆம் தேதி புதன் கும்பம் ராசிக்கு இடமாற்றம் அடைகிறார். லாப ஸ்தானத்தில் சூரியன், புதன், குரு,சந்திரன் இணையும் காலத்தில் தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். மாத கடைசியில் சுக்கிரனும் புதனும் 12ஆம் வீட்டிற்கு வருகின்றனர். பொறுமையும் நிதானமும் தேவைப்படும் மாதமாகும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும் என்றாலும் பெரிய அளவில் முதலீடுகளை தவிர்த்து விடுவது நல்லது. பங்குச்சந்தையில் முதலீடுகளை தவிர்த்து விடவும்.

சில நேரங்களில் மனக்குழப்பங்களில் இருப்பீர்கள். 17ஆம் தேதி சுக்கிரன் உச்சம் பெற்று சஞ்சரிக்கும் காலத்தில் பண வரவு அதிகரித்தாலும் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். புத்திர பாக்கியம் கிடைக்கும். குடும்ப உறவுகளில் இருந்த பிரச்சினைகளை தீர்க்க முயற்சி செய்வது நல்லது.

ஜாமீன் கையெழுத்து போட்டு யாருக்கும் பணம் வாங்கி கொடுக்க வேண்டாம். மாணவர்கள் படிப்பில் பொறுமையாக இருப்பது நல்லது. வியாழக்கிழமைகளில் சித்தர் சமாதிகளுக்கு சென்று வணங்குவது நல்லது. வேலை செய்யும் இடத்தில் விழிப்புணர்வும் அவசியம். குடும்பத்திலும் வேலை செய்யும் இடத்திலும் இருந்த மன வருத்தங்கள் நீங்கும்.

இந்த மாதம் உங்களுக்கு மார்ச் 04ஆம் தேதி இரவு 06.20 மணி முதல் மார்ச் 06ஆம் தேதி இரவு 09.38 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. பேச்சிலும் செயல்களிலும் நிதானம் அவசியம் வாகன போக்குவரத்தை தவிர்த்து விடவும்.

ரிஷபம்

சுக்கிரன் ராசிக்காரர்களுக்கு ரிஷபம் ராசி எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். ஒன்பது, பத்தாம் வீடுகளில் கிரகங்கள் கூடியிருப்பது சிறப்பு. பாக்ய ஸ்தானத்தில் குரு, சனி, புதன், பத்தாம் வீட்டில் சூரியன், சுக்கிரன், ராசியில் செவ்வாய், ராகு, ஏழாம் வீட்டில் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றனர்.

ரிஷபம் ராசிக்கு இந்த மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாகவே உள்ளது. ராசி நாதன் சுக்கிரன் பத்தாம் வீட்டிலும் மாத பிற்பகுதியில் லாப ஸ்தானத்திலும் உச்சம் பெறுகிறார். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நல்ல விசயங்கள் நடைபெறும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். திடீர் அதிர்ஷ்டம் தேடி வரும், வெற்றி மீது வெற்றி வந்து சேரும் காலமாக உள்ளது.

 

குருவின் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைக்கிறது என்றாலும் ஜென்ம ராசியில் உள்ள ராகு செவ்வாயினால் குடும்பத்தில் சில பிரச்சினைகள் வரும். அதிகம் கோபப்பட வேண்டாம் கோபத்தை கட்டுப்படுத்துங்கள். விட்டுக்கொடுத்து செல்வது. நல்ல பலன்கள் அதிகம் நடைபெறும்.

திருமண சுப காரியங்கள் நடைபெற நல்ல மாதம். செவ்வாய்கிழமை முருகன் கோவிலுக்கு சென்று வணங்குங்கள். புதன் இடப்பெயர்ச்சி இந்த மாதம் நடைபெற உள்ளது. சூரியன், சுக்கிரன்,புதன், சந்திரன் கூட்டணி பத்தாம் வீட்டில் இணைவது அற்புதம். யோகமும், அதிர்ஷ்டமும் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. இந்த மாதம் சந்திராஷ்டமம் மார்ச் 06ஆம் தேதி இரவு 09.38 மணி முதல் மார்ச் 09ஆம் தேதி அதிகாலை 02.38 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. வாகன போக்குவரத்தில் வேகத்தை தவிர்க்கவும்.

மிதுனம்

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களே. ராசிக்கு நான்காம் வீட்டில் சந்திரன் அமர்ந்து மாத பயணம் தொடங்குகிறது. பாக்ய ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், எட்டாம் வீட்டில் குரு, சனி, புதன், இந்த மாதம் வாழ்க்கையில் உயர்வும், ஏற்றமும் கிடைக்கும். சகோதரர்களால் சந்தோஷமும் நிம்மதியும் கிடைக்கும். ககணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். எட்டாம் வீட்டில் உள்ள சனிபகவான் விபரீத ராஜயோகத்தை தருவார் அஷ்டம ஸ்தானத்தில் சனியுடன் குரு, புதன் இணைந்திருக்கின்றனர். வண்டி வாகனங்களில் போகும் போது கவனம் தேவை. வேலையில் கவனமும் எச்சரிக்கையும் தேவை.

தொழில் வியாபாரத்தில் சில சங்கடங்கள் வரலாம். நல்லது நடப்பதில் தடைகள் இருந்தாலும் தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். எதிரிகளால் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வேலை தொழிலில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கஷ்டங்களை எளிதில் சமாளிப்பீர்கள். விரைய செவ்வாய் ராகு திடீர் செலவுகளை தருவார்.

பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவ செலவுகள் வரலாம். திருமண சுபகாரியம் தொடர்பாக இந்த மாதம் மாத முற்பகுதியில் பேச வேண்டாம். சூரியன், சுக்கிரன் ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிப்பதால் மாணவர்களுக்கு சுப பலன்கள் நடைபெறும். பாக்ய ஸ்தானதில் உள்ள சூரியனும், சுக்கிரனும் மாத பிற்பகுதியில் பத்தாம் வீட்டிற்கு சஞ்சரிப்பது சிறப்பு. புதிய தொழில் வேலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும்.

கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். குடும்பத்தில் சுபிட்சமும் சந்தோஷமும் உருவாகும். பெண்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். நிறைய சுப செலவுகள் வரும். திடீர் அதிர்ஷ்டங்கள் யோகங்களால் இது சந்தோஷமான மாதமாக அமையும். இந்த மாதம் உங்களுக்கு மார்ச் 09ஆம் தேதி அதிகாலை 02.38 மணி முதல் மார்ச் 11ஆம் தேதி அதிகாலை 09.21 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. வாகன போக்குவரத்தில் விழிப்புணர்வு அவசியம்.

கடகம்

சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடகம் ராசிக்காரர்களே, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது, ஏழாம் வீட்டில் குரு, சனி, எட்டாம் வீட்டில் சூரியன், புதன், சுக்கிரன், லாப ஸ்தானத்தில் செவ்வாய் ராகு சஞ்சரிக்கின்றனர். இந்த மாதம் உங்க ராசிக்கு மன நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். பாக்யாதிபதி குரு உங்களை நேரடியாக பார்வையிடுகிறார்.

மகிழ்ச்சியான மனநிலை உண்டாகும். பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். சனி ஏழாம் வீட்டில் ஆட்சி பெற்று உங்கள் ராசியை பார்வையிடுவதால் வேலையில் உற்சாகம் கிடைக்கும். வேலை கிடைப்பதில் இருந்த தடைகள் நீங்கும். சுப முயற்சிகள் நடைபெறும். குருவின் பார்வையால் திருமண சுப காரியங்கள் வெற்றியை கொடுக்கும்.

 

தனாதிபதி மறைந்து தன ஸ்தானத்தை பார்வையிடுவதால் பண வரவு கிடைக்கும். வண்டி வாகன பழுது பார்ப்பதற்காக அதிக செலவு செய்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சுக்கிரன் பாக்ய ஸ்தானத்தில் உச்சமடைவதால் அதிர்ஷ்டம் தேடி வரும். நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும். திடீர் பண வரவு வந்து உங்களை திக்குமுக்காட வைக்கும்.

குடும்பத்தில் கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன சண்டைகள் வரலாம் பொறுமையாக பேசி விட்டுகொடுத்து செல்லவும். காரணம் சூரியன், சுக்கிரன் எட்டாம் வீட்டில் பயணம் செய்வதுதான். மாத முற்பகுதியில் எட்டாம் வீட்டில் உள்ள கிரகங்கள் மாத பிற்பகுதியில் ஒன்பதாம் வீட்டிற்கு நகர்ந்த பின்னர் நிறைய சுபகாரியங்கள் நடைபெறும். மாணவர்கள் மேல்நிலை கல்வி தொடர்பாக புதிய முயற்சிகள் எடுப்பீர்கள்.

ராகுவினால் குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். கணவன் மனைவி உறவில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். இந்த மாதம் உங்களுக்கு மார்ச் 11ஆம் தேதி அதிகாலை 09.21 மணி முதல் மார்ச் 13 ஆம் தேதி மாலை 05.56 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது. பேச்சிலும் செயலிலும் நிதானமும் கவனமும் அவசியம்.