தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரான விஜயகுமாரின் மகளான வனிதா ஜூன் 27ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது திருமண பெரும் சர்ச்சைகளுக்கு உள்ளாகி வருகிறது. லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, லிப்ரா புரொடக்ஷன் ரவீந்திரன் என பலர் வனிதாவின் திருமணம் பற்றி பேசியதால் அவர்களிடையே சண்டையில் ஈடுபட்டு வந்தார்.
ஒரு கட்டத்தில் மூவரையும் தரக்குறைவாக பேசினார் வனிதா. அதிலும் குறிப்பாக லட்சுமி ராமகிருஷ்ணனை லைவ் வீடியோவில் கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து வனிதா இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க ட்விட்டர் பக்கத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
டுவிட்டர் பக்கத்தை திறந்தாலே இவர்களின் சண்டை குறித்த விவரங்கள் ஆகவே இருந்து வந்த நிலையில் தற்போது வனிதா ட்விட்டரில் இருந்து வெளியேறி இருப்பதால் ரசிகர்கள் பெருமூச்சு விடுகின்றனர்.
இனியாவது இந்த பிரச்சனை முடிவுக்கு வருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.