பொதுவாகவே அசைவ பிரியர்களும் விரும்பி உண்ணும் சைவ உணவுகளின் பட்டியவில் நிச்சயம் பாளான் முக்கிய இடத்தை பிடித்துவிடுகின்றது.

அதில் அதிக கொழுப்புச் சத்தோ, கொலஸ்டிரால் அல்லது கலோரிகள் இல்லை. இதனால் இது நம் இதயத்துக்கு நல்லது. தினசரி உணவில் 18 கிராம் மஷ்ரூம் சேர்த்துக்கொண்டால், கேன்சர் வரும் வாய்ப்பை 45% வரை குறைக்க முடியும் என ஆய்வு தகவல்கள் குறிப்பிடுகின்றன.

தாபா பாணியில் நாவில் எச்சில் ஊறவைக்கும் கடாய் மஷ்ரூம்... இப்படி செய்து அசத்துங்க | Tasty Kadai Mushroom Recipe In Tamilகாளானில் வைட்டமின் டி சத்து அதிகமாக உள்ளது. சாதாரணமாக காலை சூரிய ஒளி நம்மீது பட்டால் வைட்டமின் டி சத்து கிடைக்கும். உணவுகளில் மஷ்ரூம் வைட்டமின் டி சத்தை பெற ஒரு நல்ல வழி. கால்சியம் அளவு சமநிலைப்படுத்தி, எலும்புகளை  வலுவாக்கவும் மஷ்ரூம் பெரிதும் துணைப்புரிகின்றது. 

இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த மஷ்ரூமில் தாபா பாணியில் அசத்தல் சுவையில்  கடாய் மஷ்ரூம் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தாபா பாணியில் நாவில் எச்சில் ஊறவைக்கும் கடாய் மஷ்ரூம்... இப்படி செய்து அசத்துங்க | Tasty Kadai Mushroom Recipe In Tamil

தேவையானப் பொருட்கள்

காளான் - 250 கிராம் 

பெரிய வெங்காயம் - 2

குடைமிளகாய் - 1

தக்காளி - 2 

பூண்டு - 6

பல் - இஞ்சி

ஒரு துண்டு - உப்பு

தேவையான அளவு - சர்க்கரை

அரை ஸ்பூன் - பட்டர் -1 தே.கரண்டி 

கொத்தமல்லி தழை அலங்கரிக்க

தாபா பாணியில் நாவில் எச்சில் ஊறவைக்கும் கடாய் மஷ்ரூம்... இப்படி செய்து அசத்துங்க | Tasty Kadai Mushroom Recipe In Tamil

வறுத்து அரைக்க தேவையானவை 

தாபா பாணியில் நாவில் எச்சில் ஊறவைக்கும் கடாய் மஷ்ரூம்... இப்படி செய்து அசத்துங்க | Tasty Kadai Mushroom Recipe In Tamil

வர மிளகாய் -2

தனியா - 1 தே.கரண்டி

சீரகம் - 1 மேசைக்கரண்டி 

சோம்பு - 1 மேசைக்கரண்டி

மிளகு - 1 தே.கரண்டி 

கசூரி மேத்தி -1  மேசைக்கரண்டி

பட்டை - ஒரு துண்டு

கிராம்பு - 2 

ஏலக்காய் - 2

பிரியாணி இலை - 1 

தாபா பாணியில் நாவில் எச்சில் ஊறவைக்கும் கடாய் மஷ்ரூம்... இப்படி செய்து அசத்துங்க | Tasty Kadai Mushroom Recipe In Tamil

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து வறுத்து அரைக்க கொடுத்து உள்ள பொருட்களில் கசூரி மேத்தி தவிர மற்ற பொருட்களை சேர்த்து பொன்நிறமாக வருத்துக் தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பை அணைத்து விட்டு அதே சூட்டில் கசூரி மேத்தி வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து  ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும்,  பெரிய வெங்காயம், பூண்டு ,இஞ்சி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

தாபா பாணியில் நாவில் எச்சில் ஊறவைக்கும் கடாய் மஷ்ரூம்... இப்படி செய்து அசத்துங்க | Tasty Kadai Mushroom Recipe In Tamil

இவை நன்றாக வதங்கிய பின்னர்  நறுக்கி வைத்திருக்கும் தக்காளி ,சிறிது மஞ்சள் ,வறுத்து வைத்து இருக்கும் அனைத்து மசாலாவையும் இதனுடன் சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும். பின்னர் இந்த கலவை ஆறியதும் ஒரு மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து வைத்து கொள்ள வேண்டும்.

அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து பட்டர் போட்டு நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயம், குடைமிளகாய் இரண்டையும் வதக்கி தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும். 

பின்னர் அதே பாத்திரத்தில்  சிறிது எண்ணெய் ஊற்றி அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை போட்டு நன்றாக  வதக்கிக்கொள்ள வேண்டும். 

எண்ணெய் பிரிந்து வரும் போது நறுக்கி வைத்திருக்கும் மஷ்ரூமையும் அதில்  போட்டு வதக்கவும் சிறிது நீர் சேர்த்து நன்றாக  வேகவிட வேண்டும். 

பின்னர் மஷ்ரூம் நன்றாக வெந்ததும்  உப்பு சரிபார்த்து அதில் சேர்த்து பின்னர் அரை ஸ்பூன் சுகர் சேர்க்கலாம். இறுதியாக வதக்கி வைத்து இருக்கும் பெரிய வெங்காயம் குடைமிளகாய் துண்டுகள் சேர்த்து ஒரு 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து கொத்தமல்லி இலைகளை சேர்த்தால் அவ்வளவு தான் தாபா பாணியில் கடாய் மஷ்ரூம் தயார்.