உங்கள் காதலில் பிரச்சனைகள் இருந்து கடைசியில் பிரியும் கட்டத்தில் இருந்தால் கூட இந்த பொருளை கழுத்தில் போட்டால் வெற்றி பெறும்.
வாழ்க்கையில் பணம் முக்கிய பங்கு வகித்தாலும், உண்மையான மகிழ்ச்சியும் மன நிம்மதியும் ஏற்படுவது பெரும்பாலும் காதல் உறவுகளில்தான்.
ஒருவரின் ஆளுமை காதல் வாழ்க்கையை நிர்ணயிப்பதோடு, சிறிய நேர்மறை ஆற்றலும் அந்நடையை எளிதாக்கும் சக்தி வாய்ந்தது.
அந்த வகையில், இளஞ்சிவப்பு குவார்ட்ஸ் (Rose Quartz) கொண்டு செய்யப்பட்ட பதக்கம் அல்லது டாலர், காதல் மற்றும் உறவுகளில் பல நன்மைகளை அளிக்கிறது என்று நம்பப்படுகிறது.
முக்கிய நன்மைகள்: புதிய காதலை ஈர்க்கும்: ரோஸ் குவார்ட்ஸ் பதக்கம் புதிய காதல் உறவுகளுக்குத் தூண்டுதல் அளிக்கிறது. ஏற்கனவே உள்ள உறவுகளில் உறுதி மற்றும் நம்பிக்கையை அதிகரிக்கிறது.
இதய சக்கரத்தை திறக்கும்: இந்த கல் இதய சக்கரத்தை இயக்கி, கடந்த கால உணர்ச்சி காயங்களை ஆற்றி, மன நிம்மதியை ஏற்படுத்துகிறது.
உணர்ச்சி பிணைப்புகளை ஆழப்படுத்தும்: உறவுகளில் நம்பிக்கை, நல்லிணக்கம், மற்றும் நிபந்தனையற்ற அன்பை ஊக்குவிக்கிறது.
உணர்வுகளை வெளிப்படுத்த உதவும்: இதய சக்கரத்தை சமநிலையுடன் வைத்ததால், உங்கள் உணர்வுகளை திறமையாக வெளிப்படுத்தவும், நீங்கள் விரும்பும் உறவுகளை ஈர்க்கவும் உதவுகிறது.
வெள்ளிக்கிழமை காலை இந்த பதக்கத்தை அணிவது சிறந்ததாக கருதப்படுகிறது. சுத்தமான தண்ணீரில், ஒரு சிட்டிகை கடல் உப்பு சேர்த்து பதக்கத்தை சில மணி நேரம் ஊறவைத்து சுத்திகரிக்கவும்.
பின்னர், அதை கைகளில் வைத்துக்கொண்டு உங்கள் காதல் மற்றும் மனநல நோக்கங்களில் கவனம் செலுத்துங்கள். "ஓம் மணி பத்மே ஹம்" என்ற மந்திரத்தை 11 முறை உச்சரித்து அணிய வேண்டும். இது அன்பும் அமைதியும் அதிகரிக்கும்.
அமாவாசை நாள் இது புதிய தொடக்கங்களுக்கும், ஆற்றலுக்குமான திறப்புக்கும் உகந்தது. இந்த சந்திரக் கட்டத்தில் ரத்தினக் கல் அணிவது அதன் சக்தியைப் பெருக்கி, உங்கள் ஆசைகளையும் நோக்கங்களையும் பிரபஞ்சத்துடன் இணைக்கும்.