பொதுவாகவே மனிதர்களாக பிறந்த அனைவருக்குமே அதிகமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்றும், செல்வ செழிப்புடன் சொகுசு வாழ்க்கைகையை அனுபவிக்க வேண்டும் எனவும் ஆசைப்படுவது இயல்பு தான்.

ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே பணத்தை விட அனுபவங்களை சேர்ப்பதில் ஆர்வம் கொண்டவர்களாகவும், பயணம் செய்வதில் மகிழ்ச்சியடையும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்களாம்.

பணத்தின் மீது ஆசையற்ற ராசியினரும் இருக்காங்களா? உங்க ராசியும் இதுவான்னு பாருங்க | Which Zodiac Sign Loves To Spend Money

அப்படி பணத்தை சேர்த்து வைப்பதை விடுத்து மற்றவர்களுக்கு கொடுப்பதிலும், வாழ்வில் வித்தியாசமான அனுபவங்களை பெருவதிலும் அதிக ஆர்வம் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

கும்பம்

பணத்தின் மீது ஆசையற்ற ராசியினரும் இருக்காங்களா? உங்க ராசியும் இதுவான்னு பாருங்க | Which Zodiac Sign Loves To Spend Money

கும்ப ராசியினர் பிறப்பிலேயே வழக்கத்திற்கு மாறான சிந்தனை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் சனிபகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், நீதி நேர்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

கும்ப ராசிக்காரர்கள் பொதுவாக மற்றவர்கள் வெற்றி மற்றும் சாதனை என்று நம்பும் விஷயங்களை புறந்தள்ளுகிறார்கள். இவர்களை பொறுத்தவரையில் வாழ்வில் நல்ல அனுபவங்களை சேர்ப்பதே முக்கியம்.

பணம் அல்லது ஆடம்பரப் பொருட்களைச் சேமித்து வைத்து சந்தோஷப்படும் பொதுவான மனிதர்களை போல் அல்லாது சமூக பிரச்சினைகளுக்காக போராடும் அனுவங்களை ரசிக்கும் நபர்களாக இருப்பார்கள்.

தனுசு

பணத்தின் மீது ஆசையற்ற ராசியினரும் இருக்காங்களா? உங்க ராசியும் இதுவான்னு பாருங்க | Which Zodiac Sign Loves To Spend Money

தனுசு ராசியினர் வாழ்க்கையில் பணத்தை அதிகளவில் சம்பாதித்தாலும், அதனை தாங்களே வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை துளியும் இல்லாதவர்களாக இருப்பார்கள். 

பயணம் மற்றும் தத்துவத்தின் கிரகமான குரு பகவானால் ஆளப்படுவதால், இவர்களிடம் இயல்பாகவே அதிக பணம் சேரும்.

ஆனால் இவர்கள் பணத்தை மற்றவர்களுக்கு அதிகம் செலவு செய்வதிலும் பயணம் பண்ணுவதிலும் அதிக ஈர்ப்பு கொண்டவர்களாக இருப்பார்கள்.

தனுசு ராசிக்காரர்கள் சாகசம், கற்றல் மற்றும் சுதந்திரத்தின் மீதான ஆர்வத்திற்கு பெயர் பெற்றவர்கள். இவர்களும் வாழ்வில் வித்தியாசமாக அனுபவங்களை பெறுவதையே அதிகம் விரும்புவார்கள்.

துலாம்

பணத்தின் மீது ஆசையற்ற ராசியினரும் இருக்காங்களா? உங்க ராசியும் இதுவான்னு பாருங்க | Which Zodiac Sign Loves To Spend Money

சுக்கிரனால் ஆளப்படும் துலாம் ராசிக்காரர்கள் அழகு மற்றும் ஆடம்பரத்தை அனுபவிப்பதில் ஆர்வம் காட்டுவாரை்கள். ஆனால் இவர்களுக்கு பணத்தை சேர்க்க வேண்டும் என்ற வெறி இருக்காது. 

விலையுயர்ந்த பொருட்களை  சேர்ப்பதை விட தங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் வாழ வேண்டும் என்பதில் தான் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

அவர்களுக்கு பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதில் இருக்கும் ஆர்வம் அதனை சேமித்து வைக்க வேண்டும் என்பதில் இருக்காது. மற்றவர்களுக்கு செலவு செய்யும் தருணங்களை ரசித்து செய்யும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.