ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதாரம், காதல் வாழ்க்கை, தொழில் வாழ்க்கை மற்றும் அவர்களின் ஆளுமை, நேர்மறை, எதிர்மறை குணங்களுடன் மிக நெருங்கிய வகையில் தொடர்புப்ட்டிருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
அந்தவகையில்,குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் வாழ்வில் யாருக்கும் அடிமையாக இருக்கவே மாட்டார்கள்.

முதலாளியாகும் அதிர்ஷ்டம் இவர்களுக்கு பிறப்பிலேயே இருக்கும். அப்படி மற்றவர்கள் பார்த்து வியக்கும் அளவுக்கு பெரிய முதலாளிகளாக மாறும் ராஜ யோகத்துடன் பிறப்பெடுத்த ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசியினர் போர் கிரகமான செவ்வாயால் ஆளப்படுகின்றார்கள். எனவே இவர்களிடம் துணிச்சலுக்கு பஞ்சமே இருக்காது.
இவர்கள் எப்போதும் மற்றவர்களின் கீழை் பணியாற்றுவதை விரும்புவது கிடையாது.இவர்களின் இந்த குணம் தான் இவர்களை முதலாளிகளாக மாற்றும் முதல் தகுதியாக இருக்கும்.
தைரியமாக புதிய பணிகளை தொடங்குவதோடு உறுதியான முடிவுகள் மூலம் இலக்கை அடைய அயராது உழைக்கும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.
இவர்களின் விடாமுயற்சி மற்றும் பிறப்பு அதிர்ஷ்டம் இவர்களை நிச்சயம் பெரிய முதலாளிகளாகவும், தொழில் அதிபர்களாகவும் உருவாக்கியே தீரும்.
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் ராசியினர் அனைத்து கிரகங்களுக்கும் அதிபதியாக திகழும் சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், இவர்களிடம் தலைமைத்துவ குணம் இயல்பாகவே இருக்கும்.
அவர்களின் ராசி சின்னத்தை போல சிங்கத்தின் தன்மையைக் கொண்டிருப்பார்கள். யாருக்கும் கட்டுப்பட்டு நடக்காத குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் செய்யும் தொழிலுக்கு இவர்கள் தான் முதலாளியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
சிங்கம் எப்படி ஒரு குழுவை வழிநடத்திச் செல்லுமோ அதுபோல முதலாளித்துவம் இவர்களின் ரத்தத்தில் கலந்ததாக இருக்கும்.
தனுசு

தனுசு ராசிக்காரர்கள் பிறப்பிலேயே தங்களின் சுதந்திரத்துக்கும் சாகச இயல்புக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்களின் வாழ்க்கையில் சுதந்திரத்துக்காக எதையும் இழக்க தயாராக இருப்பார்கள்.
மற்றவர்களை அடக்கியாள வேண்டும் என்ற அடிப்படை உணர்வு இவர்கள் தலைவர்களாகவும், முதலாளிகளாகவும் உருவெடுப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கும்.
இவர்கள் நகைச்சுவையாகவும், வேடிக்கையாகவும் பேசி மற்றவர்களை எளிதாக கவர்வார்கள். இவர்கள் சொல்வதை மற்றவர்கள் விரும்பி கேட்கும் அளவுக்கு தந்திரமாக மற்றவர்களை வேலை வாங்க தெரிந்த கில்லாடிகளாக இருப்பார்கள்.
