ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதார நிலை, காதல் வாழ்க்கை, தொழில், விசேட ஆளுமைகளில் தாக்கம் செலுத்துவது போல், அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களிலும் நேரடி தொடர்பை கொண்டிருக்கும் என நம்பப்படுகின்றது.
அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் இயல்பாகவே மற்றவர்களை எரிச்சலூட்டு குணம் கொண்டவர்களாகவும், தேவையில்லாமல் அனைவரிடமும் திமிராக பேசுபவர்களாவும் இருப்பார்களாம்.

அப்படி குறிப்பாக ஆண்களால் அதிகம் வெறுக்கப்படும் முக்கிய குணங்களின் ஒட்டுமொத்த உருவமாக திகழும் பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்கள் இயல்பாகவே அவர்களின் இரட்டை இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் உண்மையை வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள்.
ஒரே நேரத்தில் பல கண்ணோட்டங்களைப் பார்க்கக்கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் உறவில் நிலைத்தன்மையற்றவர்களாகவும், தங்களின் தேவை முடிந்தவுடன் யாராக இருந்தாலும் தூக்கியெறியும் குணம் இவர்களிடம் இருக்கும்.
மேலும் வெளிப்படையாக பேசாமல் எப்போதும் திரைமறைவில் செயல்படுவதால், இந்த ராசி பெண்களை மற்றவர்கள் அதிகம் வெறுக்கின்றார்கள். குறிப்பாக ஆண்களால் இந்த குணங்கள் முற்றிலும் வெறுக்கப்படுகின்றது.
விருச்சிகம்

மாற்றத்தின் கிரகமான புளூட்டோவால் ஆளப்படும்விருச்சிகம், மற்றவர்களில் உணர்ச்சிபூர்வமான, ஆழமான எதிர்வினைகளைத் தூண்டும் குணத்தை இயல்பாகவே கொண்டிருக்கும்.
இந்த ராசி பெண்கள் மர்மமான இயல்புக்கும்,இரகசியம் காக்கும் தன்மைக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் நெருங்கிய நண்பரிடம் கூட நிறைய விடயங்களை மறைத்துவிடுவார்கள். இவர்களின் வாழ்க்கை பற்றிய அனைத்தும் தெரிந்த நபராக இவர்கள் தான் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். இவர்களின் இந்த குணங்களால் அதிகம் வெறுக்கப்படுகின்றார்கள்.
மகரம்

மகரம் ராசியில் பிறந்த பெண்கள் தங்களின் தீவிரமான தன்மைக்கு பெயர் பெற்றவர்கள்.இவர்களிடம் இயல்பாகவே மற்றவர்களை மதிக்காத ஒரு திமிரான நடத்தை இருக்கும்.
தேவையே இல்லாமல் மற்றவர்களிடம் தங்களின் ஆணவத்தை வெளிப்படுத்துவார்கள். இவர்கள் உயர்ந்தவர்கள் என்பதை நிரூபிக்க யாரை வேண்டுமானாலும் அவமானப்படுத்த தயாராக இருப்பார்கள்.
சில சமயங்களில் தங்களின் வாழ்க்கை துணையை கூட தங்களின் திமிரால் அடக்கி வைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இந்த தனித்துவ குணங்களால் பெரும்பாலும் ஆண்களால் இந்த ராசி பெண்கள் வெறுக்கப்படுகின்றார்கள்.
