பொதுவாகவே ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட ஆளுமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என்று ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே தங்களின் குடும்பத்தின் மீதும் உறவுகள் விடயத்திலும் அதீத அக்களை கொண்டவர்களாக இருப்பார்கள்.

குடும்பத்துக்காக உயிரையும் கொடுக்க துணியும் டாப் 3 ராசிகள்... இவங்க கிடைப்பதே வரம் | Which Zodiac Signs Are Protectors Of Their Family

அப்படி குடும்பத்தை பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்லும் குணம் கொண்ட உன்னத ஆன்மாக்களாக அறியப்படும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

குடும்பத்துக்காக உயிரையும் கொடுக்க துணியும் டாப் 3 ராசிகள்... இவங்க கிடைப்பதே வரம் | Which Zodiac Signs Are Protectors Of Their Familyமேஷ ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே போர் குணம் கொண்டவர்களாகவும், தங்களின் குடும்பத்துக்காகவே வாழும் தன்மையுடையவர்களாகவும் இருப்பார்கள்.

ஆனால் இவர்கள் தங்களின் பாசத்தை வார்த்தைகளால் நிரூபிக்க ஒருபோதும் முயற்ச்சிக்கவே மாட்டார்கள். அதுவே தங்களின் அன்புக்குரியவர்களுக்கு ஒரு ஆபத்து என்றால் உயிரை கொடுக்க தயாராக இருப்பார்கள். 

இவர்பகள் குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்காகவும், தேவைகளை நிறைவேற்றுவதற்காகவும் தங்களின் மகிழ்சியை கூட தியாகம் செய்யும் குணத்தை நிச்சயம் கொண்டிருப்பார்கள். இந்த ராசியினர் கூட இருந்தால் இவர்களின் துணையை மட்டுமல்ல நண்பர்களை கூட  யாராலும் நெருங்கவே முடியாது.

கடகம்

குடும்பத்துக்காக உயிரையும் கொடுக்க துணியும் டாப் 3 ராசிகள்... இவங்க கிடைப்பதே வரம் | Which Zodiac Signs Are Protectors Of Their Family

அன்பு மற்றும் ஆடம்பரத்தின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் கடக ராசிக்காரர்கள் இயல்பாகவே பாசத்துக்கும் தாய்மை உணர்வுக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்களின் அன்புக்குரியவர்களுக்காக எதையும் செய்ய தயாராக இருப்பார்கள். 

அக்கறையான இயல்பும் எளிதில் உணர்ச்சிவசப்படும் தன்மையும் கொண்ட இவர்கள் ஒருவர் மீது பாசம் வைத்துவிட்டார்கள் என்றால்,  இவர்களுக்காக யாரையும் எதிர்த்து நிற்க தயங்க மாட்டார்கள்.

இவ்வளவு கடிகமான சூழ்நிலையில், உறவுகளை விட்டுக்கொடுக்காத உன்னத குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும். இவர்களை பொருத்தமட்டில் குடும்பம் தான் வாழ்வில் மிகவும் முக்கியம். 

விருச்சிகம்

குடும்பத்துக்காக உயிரையும் கொடுக்க துணியும் டாப் 3 ராசிகள்... இவங்க கிடைப்பதே வரம் | Which Zodiac Signs Are Protectors Of Their Familyவிருச்சிக ராசியினர் இயல்பிலேயே தங்களின் மர்மமான குணத்துக்கும் ரகசிய தன்மைக்கும் பெயர் பெற்றவர்களாகவும், தங்களின் தனிப்பட்ட விடயங்களை யாரிடடும் பகிராதவர்களாகவும் இருப்பார்கள்.

ஆனால் இவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களைப் பாதுகாக்கவும், இவர்களுக்காக போராடவும் ஒருபோதும் தயங்கவே மாட்டார்கள். இவர்களை பொருத்தவரையில் உண்மையான அன்பு என்பது ஆபத்தில் துணை நிற்பது தான். 

இந்த ராசியினர் ஆணாக இருந்தாலும் சரி , பெண்ணாக இருந்தாலும் சரி தங்களின் குடும்பத்துக்காக எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் உழைக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் குடும்பத்தவர்களை யார் சீண்டினாலும் அவர்களுக்கு வாழும் போதே நரகத்தை காட்டும் அளவுக்கு பழிதீர்கும் குணம் இவர்களிம் இருக்கும்.