பிரதீப் ரங்கநாதன்

குறும்படம் இயக்குநராக அறிமுகமாகி 2019ல் ரவி மோகன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பல நட்சத்திரங்களை வைத்து கோமாளி என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர் தான் பிரதீப் ரங்கநாதன். இப்படத்தினைஇ தொடர்ந்து லவ் டுடே படத்தினை இயக்கி நடித்த பிரதிப் ரங்கநாதன், டிராகன் டூட், LIK போன்ற படங்களில் நடித்தார்.

பிரதீப் ரங்கநாதனின் 33வது பர்த்டே!! சொத்து மதிப்பு இவ்வளவா? | 33Rd Birthday Pradeep Ranganathan Networth 2026

PR01 என்ற படத்தினை தயாரித்து வரும் பிரதீப் ரங்கநாதன் ஜூலை 25 ஆம் தேதி இன்று தன்னுடைய 33வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். தற்போது அவரது சம்பளம் மற்றும் சொத்து மதிப்பு விவரம் வெளியாகியுள்ளது.

கோமாளி படத்தினை இயக்க பிரதீப் ரூ. 50 லட்சம் சம்பளமும் லவ் டுடே படத்தில் நடிக்க ரூ. 70 லட்சம் சம்பளமும் வாங்கினார். அதன்பின் 1.5 கோடி ரூபாயாக சம்பளத்தை நிர்ணயித்த பிரதீப், டிராகன், LIK படங்களுக்கு சுமார் ரூ. 10 முதல் 12 கோடி வரை சம்பளமாக பெற்றிருக்கிறாராம்.

அந்தவகையில் பிரதீப் ரங்கநாதனின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ. 17 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.