இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், எந்த பொருட்களை வாங்கினால் அதிர்ஷ்டம் என்றும், என்னென்ன தவறுகள் செய்யக்கூடாது என்பதையும் தெரிந்து கொள்வோம்.

தீபாவளி பண்டிகை உலகம் முழுவதும் நாளை கொண்டாடப்படும் நிலையில், மக்கள் புதிய ஆடை, பலகாரங்கள், பட்டாசு என்று வாங்கி மகிழ்ச்சியாக தீபாவளியை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறான தீபாவளி பண்டிகையில் கொண்டாட்டம் ஒருபுறம் இருந்தாலும், முக்கிய செயலாக பார்க்கப்படுவது எண்ணெய் குளியல் தான்.

பொதுவாக எண்ணெய் என்பதை அபசகுணமாக பார்க்கப்படும் நிலையில், தீபாவளி கொண்டாட்டத்தினை எண்ணெய் குளியலைக் கொண்டு ஆரம்பிப்பதற்கு காரணம் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தீபாவளி அன்று வீட்டிற்கு உப்பு வாங்கினால் அதிர்ஷ்டம் என்று கூறப்படுகின்றது. உப்பில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஒரு ஐதீகம் உள்ளது.

மேலும் தீபாவளியன்று பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களிலும் ஒவ்வொரு தெய்வத்தின் கடாட்சம் இருப்பதாக சாஸ்திரம் கூறுகிறது. எண்ணெய்-லட்சுமி; சிகைக்காய் – சரஸ்வதி; சந்தனம் – பூமாதேவி; குங்குமம் – கௌரி; தண்ணீர் – கங்கை; இனிப்புப் பலகாரம் – அமிர்தம்; நெருப்புப் பொறி – ஜீவாத்மா; புத்தாடை – மகாவிஷ்ணு என்று கூறப்படுகின்றது.

அதே போன்று தீபாவளி அன்று பசு மற்றும் கன்று இவற்றினை வணங்கினால் குழந்தைகள் நற்குணம் கொண்டவர்களாக வளர்வார்கள் என்றும் கூறப்படுகின்றது.