கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வருகின்றமையினால் திருகோணமலையிலும் பி.சி.ஆர்.பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் கடந்த 29 ஆம் திகதி 17 பேருக்கு, பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

குறித்த நபர் திருகோணமலை நகரின் மத்திய வீதியிலுள்ள கடை ஒன்றில் வேலை செய்து வருபவர் என்பதால் அவருடன் சம்பந்தப்பட்டவர்களிடம் பெறப்பட்ட அண்டிஜன் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் மேலும் 3பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன்காரணமாக குறித்த வீதியிலுள்ள கடைகளின் உரிமையாளர்களுக்கும் அங்கு பணி புரிபவர்களுக்கும் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை பி.சி.ஆர்.பரிசோதனைகளுக்கான மாதிரிகள் பெறப்பட்டன.

ஆகவே, தொற்று அதிகரிக்கக்கூடும் என்பதால் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.