அம்பாறை திருக்கோலில் பிரதேசத்தில் இரண்டு கிலோ கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவரை இன்று (06) விசேட அதிரடிப்படையினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று காலை திருக்கோவில் குடிநிலப்பகுதியிலுள்ள குறித்த வீட்டை விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்து சோதனையிட்டனர்.
இதன்போது குறித்த பெண்ணின் கணவர் யாழ்ப்பாணத்தில் இருந்து பஸ்வண்டியில் இன்று அதிகாலையில் இரண்டு பொதிகளுடன் வந்துள்ளதாகவும் அதனை அவர் வீட்டில் ஒழித்து வைத்துவிட்டு பொத்துவிலுக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எடுத்துவந்த இரண்டு கிலோ கஞ்சாவை விற்பதற்கு ஈடுபட்டுவந்த நிலையில் விசேட அதிரடிப்படையினர் அதனை வாங்குவதாக நாடகமாடி சென்ற நிலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவரை கைது செய்ததுடன் 2 கிலோ கஞ்சாவை மீட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்ணையும் கஞ்சாவையும் விசேட அதிரடிப்படையினர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது
- Master Admin
- 05 May 2021
- (436)

தொடர்புடைய செய்திகள்
- 09 February 2021
- (568)
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும...
- 15 January 2021
- (398)
நாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால...
- 20 April 2024
- (1434)
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் ராஜயோகம்!...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
- 26 July 2025
இத தவறாம செய்ங்க.. தலைமுடி முழங்கால் வரை வளரும்
- 23 July 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.