தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த மற்றும் பெதிகம பிரதேசங்களுக்கு இடையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை 9 மணி அளவில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாத்தறை பகுதியில் இருந்து வந்த வேன் வாகனம் ஒன்று வீதியில் பராமரிப்பு பணியில் இருந்த வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான டிப்பர் வாகனத்தில் மோதுண்டதில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, வேனில் பயணித்த மூவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் ஏனைய இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கராபிட்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.