பொதுவாக மனிதர்களாக பிறந்த அனைவரும் நமது உடலிலுள்ள ஒவ்வொரு பகுதியையும் பராமரிப்பது அவசியம்.

அதிலும் குறிப்பாக அந்தரங்க பகுதிகளை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். அந்த பகுதியைச் சுற்றியுள்ள பகுதியில் முடி வளர்வதை அவதானித்திருப்போம்.

இளமை பருவத்தை அடையும் பொழுது இந்த மயிர்கள் வளர ஆரம்பிக்கின்றன. அந்தரங்க பகுதியைச் சுற்றியுள்ள முடியைப் பற்றி பலர் குழப்பமடைகிறார்கள்.

சிலர் இந்த முடிகளை சுத்தம் செய்வது அவசியம் என நம்புகிறார்கள். இன்னும் சிலர் அவற்றை இயற்கையான பாதுகாப்பாக நினைக்கிறார்கள்.

90% பேருக்கு தெரியாத தகவல்- அந்தரங்க பகுதியில் முடிகளை அகற்றலாமா? | Why Should Not Remove Pubic Hair In Tamil

அந்த வகையில் அந்தரங்களில் வளரும் முடியை அகற்றுவது ஆரோக்கியமா? என்பதற்கு மருத்துவர் ஒருவர் கொடுத்த விளக்கத்தை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம். 

இந்த விடயம் குறித்து மருத்துவர் ஒருவர் பேசுகையில், அந்தரங்க பகுதியைச் சுற்றியுள்ள முடியை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும் என கூறுகிறார். அந்தரங்க முடி உடலின் பாதுகாப்பு அடுக்காகச் செயல்படுவதாக பலரும் நம்புகிறார்கள். ஆனால் பல மாதங்களாக அதனை அகற்றாமல் அப்படியே விட்டு விடுகிறார்கள்.

இது உடல் ஆரோக்கியத்திற்கு விளைவுகளை ஏற்படுத்தும். அந்தரங்க முடி இருப்பதால் கோடை மற்றும் மழைக்காலங்களில் அதிக அளவில் வியர்வை ஏற்படும். இதனால் அந்த இடங்களில் பாக்டீரியா அல்லது பூஞ்சை தொற்றை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, அந்தரங்கப் பகுதியின் முடியை அவ்வப்போது கவனமாக அகற்றி விட வேண்டும்.

90% பேருக்கு தெரியாத தகவல்- அந்தரங்க பகுதியில் முடிகளை அகற்றலாமா? | Why Should Not Remove Pubic Hair In Tamil

மேலும், ஒருவருக்கு தோல் தொடர்பான பிரச்சினைகள் இருந்தால் உரிய மருத்துவரிடம் ஆலோசனை எடுத்துக் கொண்டு முடிகளை அகற்றலாம். அந்தரங்க முடி மிக நீளமாக இல்லாவிட்டாலும், அதனை அகற்றுவது அவசியம். இந்த பகுதியை தொடர்ந்து சுத்தம் செய்ய வேண்டும்.

அதே சமயம், அந்தரங்க முடியை அகற்றும் பொழுதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தவறான வழிகளில் அகற்றும் பொழுது சருமத்தில் வ வெட்டுக்கள் அல்லது தடிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

90% பேருக்கு தெரியாத தகவல்- அந்தரங்க பகுதியில் முடிகளை அகற்றலாமா? | Why Should Not Remove Pubic Hair In Tamil

ஷேவிங் அல்லது வாக்சிங் பூசுவதால் ஏற்படும் சிறிய வெட்டுக்கள் அந்தரங்க பகுதியைச் சுற்றியுள்ள உணர்திறன் வாய்ந்த சருமத்தில் தொற்றுகளை ஏற்படுத்தும். அத்தகைய சூழ்நிலையில் மிகுந்த எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்..” என சுட்டிகாட்டியுள்ளார்.