மஞ்சள் கயிற்று தாலியில் சிலர் ஊக்கு மாட்டி வைக்கும் பழக்கம் உள்ளது. இதனால் என்னென்ன பிரச்சனைகள் இருக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தாலி என்பது திருமண வாழ்க்கையின் ஆதாரமாக பெண்களுக்கு அமைகிறது. இதை தன் கணவனுக்கு கொடுக்கும் மரியாதை போல பெண்கள் பராமரிப்பார்கள்.
திருமணத்தில் முக்கிய நிகழ்வாக தாலி அணிவிப்பது வழக்கம். இந்த தாலி கயிறு ஒன்பது இழைகளைக் கொண்டது. இந்த ஒன்பது இழைகளும் வாழ்க்கையின் ஒன்பது தார்ப்பரியங்களை குறிப்பதாக நம்பப்படுகின்றது.
இது முதன் முதலாக பெரும்பாலான பெண்கள் மஞ்சள் கயிற்றில் அணிந்துகொள்வார்கள். இது அடிக்கடி அழுக்காக மாறி விடும். இதற்காக மக்கள் தங்கச்சங்கிலியில் தாலியை மாற்றி கொள்கிறார்கள்.
வெள்ளி, செவ்வாய் போன்ற விசேஷ நாட்களில் திருமாங்கல்யத்திற்கு சிறிது குங்குமம் வைத்து கும்பிடுவது நல்லது. இப்படி செய்வது கணவனின் ஆயுளை நீடிப்பதாக நம்பப்படுகின்றது.
இது தவிர வாழ்வின் முன்னேற்றத்திற்கும் மாங்கல்ய பராமரிப்பு அவசியமாம். இப்படி கடவுளை போல புனிதமாக பாமரிக்கப்படும் மாங்கல்யத்தில் சிலர் ஊக்குகளை (சேஃப்டி பின்) மாட்டி வைத்திருப்பார்கள்.
இது கணவனின் முன்னேற்றத்தையும் வருமானத்தையும் தடை செய்யும். எனவே ஒருபோதும் திருமாங்கல்யத்தில் கோர்க்கவோ கூடாது. இதற்கான காரணம் இரும்பு சனிபகவான் பார்வை பட்ட ஒரு உலோகம் ஆகும்.
இது எதிர்மறை ஆற்றலை தருவதால் கணவனின் வருமானத்தையும் தடை செய்யும் என்று நம்பப்படுகிறது. அதனால் தான் தாலியில் ஊக்கு மாட்ட கூடாது பல புலவார்களால் எச்சரிக்கப்படுகின்றது. இது மட்டுமல்லாமல் இரும்பு உலோகம் தங்கத்திற்கு கேடு விளைவிக்கும்.